Header

Sri Lanka Army

Defender of the Nation

25th October 2019 14:35:18 Hours

651ஆவது படைத் தலைமையகத்தினால் முந்திரியம் கன்றுகள் வழங்கிவைப்பு

இராணுவத்தினரால் முன்னெடுக்கப்பட்டுவரும் ‘துருலிய வெநுவென் அபி’ திட்டத்தின் கீழ் 65ஆவது படைப்பிரிவின் படையினரால், 300 முந்திரியம் கன்றுகளானது சோலைநெல கிராமத்தின் பல்லவரயன்காடு பொதுமக்களுக்கு கடந்த வியாழக்கிழமை 22ஆம் திகதி வழங்கப்பட்டது.

65ஆவது படைப்பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் வசந்த குமரப்பெரும அவர்களின் வழிகாட்டலுக்கமைய 651ஆவது படைத் தலைமையகத்தின் கட்டளைத் தளபதி கேணல் சமத் வரகாகொட அவர்களின் ஒருங்கிணைப்பின் கீழ் 651ஆவது படைத் தலைமையகத்தின் கீழ் சேவைபுரியும் 11(தொண்) கஜபா படையணியின் படையினரின் பங்களிப்புடன் இத்திட்டம் இடம்பெற்றன.

மேலும் சோலைநெல கிராமத்தில் வாழும் திரு கே கமலேந்திரன் அவர்களினால் இம்மரக்கன்றுகளானது,65ஆவது படைப்பிரிவின் படைத் தளபதிக்கு பகிர்ந்தளிப்புக்காக வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கவிடயமாகும்.

சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், ஏனைய படைவீரர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். jordan release date | adidas Yeezy Boost 350