Header

Sri Lanka Army

Defender of the Nation

24th October 2019 20:34:15 Hours

கொழும்பு ஏர் சிம்போசியத்தில் விமான நிபுணர்களுக்கான கருத்தரங்கு

'கொழும்பு ஏர் சிம்போசியம் 2019'க்கான நடவடிக்கைகள் தொடர்பான கருத்தரங்கானது 'ஒரு சிறிய விமானப்படை எதிர்கால பார்வையை அடைவதில் முன்னோக்கிச் செல்லுங்கள்' என்ற தொனிப்பொருளுக்கமைய, அத்திட்டியவில் அமைந்துள்ள ஈகள்ஸ் லேக்ஸைட் பேன்குயட் மற்றும் மாநாட்டு மண்டபத்தில் 2019 ஒக்டோபர் மாதம் 24 ஆம் திகதி விமான நிபுணர்களின் பங்களிப்புடன் இடம் பெற்றன.

இந்த கொழும்பு விமான சிம்போசியத்தின் ஐந்தாவது கருத்தரங்கு நிகழ்வானது விமானப்படைத் தளபதி ஏர் மார்ஷல் சுமங்கல டயஸ் அவர்களின் எண்ணக்கருவிற்கமைய ஏற்பாடுசெய்யப்பட்டது. இந்த நிகழ்வில் 40 க்கும் மேற்பட்ட இராணுவத் தலைவர்கள் , தொழில்நுட்ப நிபுணர்கள், உலகளாவிய சிந்தனையாளர் குழுக்கள் மற்றும் உலகின் அனைத்துப் பகுதிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தி சில இராஜதந்திரிகள் கலந்து கொன்றனர்.

அதனைத் தொடர்ந்து பாரம்பரிய எண்ணெய் விளக்கு ஏற்றும் நிகழ்வு இடம் பெற்றதுடன், இந்த நிகழ்வில் மாநில பாதுகாப்பு அமைச்சர் ருவான் விஜயவர்தன, பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் (ஓய்வு) சாந்த கொட்டேகொட, வெளியுறவு செயலாளர் திரு.ரவிந்த ஆரியரத்ன, பாதுகாப்பு பதவி நிலை பிரதாணி அட்மிரால் ரவிந்ர விஜயகுணவர்தன, இராணுவ தளபதி லெப்டினன்ட ஜெனரல் சவேந்திர சில்வா, கடற் படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா,மற்றும் இன்னும் பலர் கலந்துகொண்டனர். இந்த சிம்போசியம் நிகழ்வானது வெள்ளிக்கிழமை (25) ஆம் திகதி வரை தொடரும் என்பது குறிப்பிடதக்க விடயமாகும்.

இராணுவ தளபதி லெப்டினன்ட ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் பதவியேற்றபின் பங்கேற்பாளர்களுடன் சில விரிவுரைகளை பகிர்ந்து கொள்ளும் சந்தர்பத்தை பெற்றுக்கொண்டதுடன், அவர்களின் வாழ்த்துக்களையும் பெற்றுக்கொண்டார். அவரின் கலந்துரையாடலில் பொதுவான சவால்களை எதிர்கொள்ள உலகளாவிய ரீதியில் விமான படையினரின் சக்தியை உருவாக்குவதற்காக தங்கள் அறிவையும் திறமையையும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று கருத்துரைத்தார். ஏர் சிம்போசியம் என்பது தேசிய, பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்சினைகளை விவாதிக்கும் ஒரு பொதுவான விமான தளத்திற்கு ஆற்றல் குறித்த உலகளாவிய நிபுணர்களை ஒன்றிணைக்கும் முக்கிய சர்வதேச நிகழ்வுகளில் ஒன்றாகும். கொழும்பு விமான சிம்போசியத்தின் முந்தைய பதிப்புகளின் முடிவுகளின் அடிப்படையில் இலங்கை விமானப்படையினர் பல மாற்றங்களைச் பெற்றுள்ளதுடன், இதில் விமானப்படை கோட்பாட்டை நிறுவுதல் மற்றும் 3 கடல்சார் படைப்பிரிவை மீண்டும் வலுப்படுத்தல் ஆகியவையாகும். best Running shoes brand | NIKE AIR HUARACHE