Header

Sri Lanka Army

Defender of the Nation

23rd October 2019 18:37:05 Hours

விஷேட படையணிக்கு ‘கெம்பிரியன் பெட்ரல்’ பயிற்சிகளில் வெண்கல பதக்கங்கள்

இலங்கை இராணுவ விஷேட படையணியைச் சேர்ந்த மூன்று அதிகாரிகள் உட்பட ஏழு படை வீரர்களை உள்ளடக்கி பிரித்தானிய இராணுவ சர்வதேச ‘ கெம்பிரியன் பெட்ரல்’ பயிற்சிகளில் ஈடுபட்டு வெண்கல பதக்கங்களை பெற்றுக்கொண்டனர்.

இந்த அப்பியாச பயிற்சிகள் லன்டனில் இம் மாதம் 2 – 18 ஆம் திகதி வரை இடம்பெற்றது.

இந்த பயிற்சியில் 40 மைல் தூரத்தை 48 மணியத்தியாலயங்களில் கரடுமுரடான கேம்ப்ரியன் மலைகள் மற்றும் பிரிட்டனில் வேல்ஸின் நடுப்பகுதியில் சதுப்பு நிலங்களை தாண்டி ரோந்து பணிகளை மேற்கொள்ளல் இடம்பெற்றன.

மேஜர் ஜயந்த ரத்னாயக அவர்களது தலைமையில் இந்த விஷேட படையணி இந்த பயிற்சிகளை மேற்கொண்டன. பிரித்தானிய இராணுவத்தின் 36 பொறியியல் படையணி இந்த பயிற்சியில் பங்கேற்றியதுடன் இந்த பயிற்சியானது மெயிட்ஷன் படைத் தலைமையக்கத்தில் இடம்பெற்றன.

இந்த ரோந்து பயிற்சிகள் இம் மாதம் (15) ,(16) ஆம் திகதி ஆரம்பமாகி (18) ஆம் திகதி நிறைவடைந்தன.

இந்த வெண்கல பதக்கமளிப்பு நிகழ்வில் பிரித்தானிய 160 படைத் தலைமையகத்தின் தளபதி ஏ.எஸ் ரிச்மன்ட், பிரித்தானியத்திற்கான இலங்கை தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் பிரிகேடியர் சுவர்ன போதொட்ட அவர்கள் இணைந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். Nike sneakers | NIKE