18th October 2019 13:40:51 Hours
கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 66 ஆவது படைப் பிரிவின் அரசபுரம் பட்டாலியன் பயிற்சி பாடசாலையில் படையினர்களுக்கு தற்கொலை மற்றும் மனநிலை பிரச்சினைகளை தடுக்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் விரிவுரைகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி திட்டமானது கொழும்பு இராணுவ மருத்துவமனையில் தடுப்பு மருத்துவம் மற்றும் மன ஆரோக்கியத்திற்கான இராணுவ பணிப்பாளர் மற்றும் இராணுவ உளவியல் பணியகத்தின் பணிப்பாளர் அவர்களது ஏற்பாட்டில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன.
இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியானது 200 படையினர்களது பங்களிப்புடன் 66 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி பிரிகேடியர் மங்கள விஜயசுந்தர அவர்களது தலைமையில் இடம்பெற்றன. latest jordan Sneakers | AIR MAX PLUS