18th October 2019 13:41:01 Hours
புதிதாக திறந்து வைக்கப்பட்ட யாழ் சர்வதேச விமான நிலையத்தை பார்வையிடுவதற்காக யாழ் இயலாலையிலுள்ள திவ்யா முன் பள்ளி மற்றும் கண்ணகை முன் பள்ளியைச் சேர்ந்த 48 மாணவர்கள் கடந்த வெள்ளிக் கிழமை 18 ஆம் திகதி யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் உதவியுடன் தங்களது விஜயத்தினை மேற்கொண்டனர். அதன் பிரகாரம் குறித்த மாணவர்கள் தங்களது ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுடன் விமான நிலைய வளாகத்தினுள் சென்றடைந்தனர்.
மேலும், குறித்த முன் பள்ளிகளின் வேண்டுகோளிற்கமைய யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவான் வணிகசூரிய அவர்கள் அனுமதி வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கவிடயமாகும். bridge media | Patike – Nike Air Jordan, Premium, Retro Klasici, Sneakers , Iicf