Header

Sri Lanka Army

Defender of the Nation

18th October 2019 13:43:55 Hours

கண்டி உயர்நிலைப் பாடசாலையின் மகளிர்கள் இணைந்து மரநடுகை பணிகளில்

கண்டி உயர் நிலை பாடசாலையின் பழைய மாணவ சங்கத்தினர்களான கொழும்பு கிளையைச் சேர்ந்த ஒரு மகளிர் குழுவினர் வன்னி பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 54 ஆவது படைப் பிரிவினால் தொடங்கப்பட்ட 'துருலிய வெனுவின் அபி” எனும் மர நடுகை நிகழ்ச்சி திட்டதிற்கமைய மரநடுகை நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இந்த பழைய மாணவர் சங்கத்தின் மகளிர்கள் 2019 ஒக்டோபர் மாதம் 13 ஆம் திகதி சினத்நகர; பிரதேசத்தில் தொடங்கப்பட்ட மரம் நடும் திட்டத்தில் தங்கள் முழு பங்களிப்பையும் வழங்கியுள்ளனர்.

கண்டி உயர் நிலை பாடசாலையின் பழைய மாணவ சங்கத்தினர்களால் மரநடுகை திட்டத்திற்காக நீர் வழங்கல் உபகரணங்கள் மற்றும் உரங்களை வாங்குவதற்காக பணம் 520.000.00 ரூபா தொகை மற்றும் 2000 லீட்டர் நீர் தாங்கி ஒன்றும் பரிசாக வழங்கினார். அத்துடன் அரை ஏக்கர் நிலத்தை வேலியுடன் உள்ளடக்கிய இப்பகுதியில் பயிரிடப்பட்ட தாவரங்களுக்கு தண்ணீர் வழங்கவும் அவர்கள் பங்களித்தனர்.

இந்த மர நடுகை திட்டத்திற்காக 54 ஆவது படைப் பிரிவின் கட்டளை தளபதிக்கு பதிலாக படைப் பிரிவின் கேர்ணல் பிரதான பதவி நிலை கேர்ணல் ஆர்.பி முனிபுர அவர்கள் கலந்து கொண்டார்.

மேலும் இந்த நிகழ்விற்கு 54 ஆவது படைப் பிரிவூ மற்றும் 542 ஆவது படைப் பிரிவூகளின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் படையினர்கள் பலர் கலந்து கொண்டனர். Running Sneakers Store | Sneaker & Lifestyle News