18th October 2019 12:10:13 Hours
யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தினரின் ஏற்பாட்டில் யாழ் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் பிராந்திய கணக்கு அலுவலகத்தில் பணியாற்றும் படையினர்களின் நலன் கருதி தங்குமிடக் கட்டிடம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு கடந்த (16) ஆம் திகதி புதன்கிழமை இடம் பெற்றது.
இந்த அடிகல் நாட்டும் நிகழ்வானது யாழ் ஸ்ரீ நாக விகாரையின் பௌத்த தேரரான கொங்கல சிரி தம்ம தேரர் அவர்களின் மத ஆசர்வாத பிரித் சடங்குகளுடன் யாழ் பாதுகாப்பு தளபதி , மேஜர் ஜெனரல் ருவான் வனிகசூரியா அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டது.
இந்த நிகழ்வில் சிரேஷ்ட பதவிநிலை அதிகாரி, அதிகாரிகள் மற்றும் படையினர்கள் பலரும் கலந்துகொண்டனர்.affiliate link trace | NIKE RUNNING SALE