18th October 2019 12:05:51 Hours
கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 18 ஆவது பாதுகாப்பு படைத் தளபதியாக மேஜர் ஜெனரல் ரசிக பெர்ணாண்டோ அவர்கள் வெலிகந்தையிலுள்ள தலைமையகத்தில் இம் மாதம் (16) ஆம் திகதி உத்தியோக பூர்வமாக பதவியேற்றார்.
தலைமையகத்திற்கு வருகை தந்த புதிய படைத் தளபதியை கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் உயரதிகாரிகளான பிரிகேடியர் சமந்த சில்வா, பிரிகேடியர் மைக்கல் வன்னியாரச்சி அவர்கள் வரவேற்று 10 ஆவது கஜபா படையினரால் இராணுவ சம்பிரதாய முறைப்படி அணிவகுப்பு மரியாதைகள் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
பின்னர் தலைமையகத்திற்கு வருகை தந்த படைத் தளபதி அவர்கள் தலைமையக வளாகத்தினுள் மரநடுகையை மேற்கொண்டு பின்னர் அவரது பணிமனையில் மஹா சங்க தேரர்களின் ஆசிர்வாத மதவழிபாடுகளின் பின்பு தனது பதவியை உத்தியோக பூர்வமாக கையொப்பமிட்டு பொறுப்பேற்றார்.
அதனை தொடர்ந்து படைத் தளபதி அவர்கள் படையினர் மத்தியில் உரை நிகழ்த்தும் போது அர்ப்பணிப்பு மற்றும் நிலையான பயிற்சியுடன் நியமிக்கப்பட்ட கடமைகளைச் செய்வதில் உறுதியாக இருக்க வேண்டும் என்றும் இந்த பெருமைமிக்க இராணுவத்தில் வீரர்கள் என்ற வகையில் அவர்களின் தொழில் திறனை மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் அவர் படையினர்களுக்கு சுட்டிக் காட்டினார்.
மேலும், கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் செயல்பாடுகளை மிகவும் திறம்பட உறுதி செய்வதற்காக அனைத்து மட்டங்களிலும் உயர்ந்த தர ஒழுக்கத்தை பராமரிப்பதன் மூலம் இராணுவத்தின் பிம்பத்தை பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.
பின் தலைமையகத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட தேநீர் விருந்தோம்பல் நிகழ்விலும் படைத் தளபதி அவர்கள் கலந்து கொண்டார்.
இச்சந்தர்ப்பத்தில் படைத் தளபதிகள், கட்டளை தளபதிகள், கட்டளை அதிகாரிகள் மற்றும் இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் இணைந்திருந்தனர். latest jordan Sneakers | Air Jordan XXX1 31 Colors, Release Dates, Photos , Gov