18th October 2019 13:43:54 Hours
இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் யாழில் புதிய சர்வதேச விமான நிலைய திறந்து வைப்பு நிகழ்வில் கலந்து கொள்வதற்கு சென்ற வேளையில் யாழ் மாவட்ட ஆயர் ஜஸ்டீன் பெர்னாட் ஞானப்பிரகாஷம் ஆண்டகை அவர்களை இம் மாதம் (17) ஆம் திகதி ஆயர் இல்லத்தில் சந்தித்தார்.
ஆயர் இல்லத்திற்கு வருதை தந்த இராணுவ தளபதியை ஆயர் இல்லத்தின் அருட் தந்தை அவர்கள் வரவேற்றார். பின்னர் இராணுவ தளபதியவர்களை ஆயர் வாசஸ்தலத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
இந்த சந்திப்பின் போது இராணுவ தளபதி அவர்களை யாழ் மாவட்ட ஆயர் ஆசிர்வதித்து வாழ்த்துக்களை தெரிவித்தார்.. இராணுவத் தலைமையகத்தில் தனது புதிய கடமைகளை ஏற்றுக்கொண்டபின், புதிய இராணுவத் தலைவர் அவருக்கு வணக்கம் செலுத்துவதில் பெருமை பெற்றுள்ளார் என்று இராணுவ தளபதி அவர்கள் தெரிவித்தார்.
அத்துடன் இராணுவ தளபதியவர்கள் எதிர்காலத்தில் இராணுவத்திற்கான தனது பார்வை, தற்போதைய இராணுவ நல்லிணக்க முயற்சிகள், பேரழிவிற்குள்ளான சீயோன் தேவாலயம் மற்றும் கட்டுவபிட்டி தேவாலயத்தின் இராணுவ சீரமைப்பு பணிகள், தேசத்தைக் கட்டமைக்கும் பணிகள் மற்றும் பிற மனிதாபிமான திட்டங்கள் குறித்தும், மேலும் இராணுவ தளபதி அவர்கள் நாட்டின் இறையான்மையை பாதுகாத்து அனைத்து பொது மக்களது பாதுகாப்பை உறுதி செய்வதாக தெரிவித்தார்.
இறுதியில் இராணுவ தளபதி அவர்களினால் யாழ் மாவட்ட ஆயருக்கு இவர்களது சந்திப்பை நினைவு படுத்தும் முகமாக பரிசொன்றையும் வழங்கி வைத்து கௌரவித்தார்.
இச்சந்திப்பின் போது யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவன் வணிகசூரிய, யாழ் படைத் தலைமையகத்தின் உயரதிகாரிகளான பிரிகேடியர் பிரியந்த சில்வா மற்றும் பிரிகேடியர் பிரியந்த கமகே அவர்கள் இணைந்து கொண்டனர். Nike Sneakers | NIKE Chaussures, Sacs, Vetements, Montres, Accessoires, Accessoires-textile, Beaute, Sous-vetements - Livraison Gratuite