18th October 2019 12:43:54 Hours
இலங்கை இராணுவ தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களை இந்திய இராணுவ போர்கருவி பணிப்பாளர் நாயகமான லெப்டினன்ட் ஜெனரல் தலிப் சிங் ரத்தோர் விஎஸ்எம் அவர்கள் இராணுவ தலைமையகத்தில் இம் மாதம் (16) ஆம் திகதி சந்தித்தார்.
இலங்கை இராணுவ தலைமையகத்திற்கு வருகை தந்த இந்திய உயரதிகாரியை இலங்கை இராணுவ தளபதியவர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்து வரவேற்றார்.
இச்சந்திப்பின் போது இரு நாடுகளுக்கிடையே தொடர்ந்து நிலவும் கடந்தகால நினைவுகளையும் உறவுகளையும் இவர்கள் நினைவு கூர்ந்து மேலும் இதுபோன்ற புரிந்துணர்வு மற்றும் நல்லெண்ணங்களை மேம்படுத்துவது தொடர்பான விடயங்களையும், இரு இராணுவத்திற்கிடையிலான முன்னேற்றத்திற்காக நீண்டகாலமாக ஆர்ட்னன்ஸ் நிபுணத்துவத்தை பரிமாறிக்கொள்ள வேண்டியதன் அவசியத்தை அவர்கள் இருவரும் கலந்துரையாடிக் கொண்டனர்.
இச்சந்திப்பின் போது இலங்கை இராணுவ போர்கருவி படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் எச். ஜி. ஐ வித்தியானந்த அவர்களும் இணைந்து கொண்டார். இந்த இந்திய இராணுவ உயரதிகாரி இலங்கை இராணுவத்தின் இராணுவ போர்கருவி படையணியின் 70 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு இலங்கைக்கு வருகை தந்திருந்தார்.
அதன் பின்பு இந்திய இராணுவ உயரதிகாரி அவர்களினால் இராணுவ தளபதியின் பணிமனையிலுள்ள பிரமுகர்களின் வருகையை முன்னிட்டு கையொப்பமிடும் புத்தகத்தில் கையொப்பமிட்டு புறப்பட்டுச் சென்றார்.Nike shoes | Nike Air Force 1'07 Essential blanche et or femme - Chaussures Baskets femme - Gov