15th October 2019 14:25:00 Hours
இலங்கை இராணுவத்தின் 70 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு 65 ஆவது படைப் பிரிவின் ஏற்பாட்டில் 652 ஆவது படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 20 (தொ) விஜயபாகு காலாட் படையணி, 7 ஆவது தேசிய பாதுகாப்பு படையணியின் ஏற்பாட்டில் இம் மாதம் 8 – 11 ஆம் திகதிகளில் சமூக பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
65 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் வசந்த குமாரப்பெரும அவர்களது வழிக்காட்டலின் கீழ் அக்கராயம்குளம், ஶ்ரீ குடும்பி முன் பள்ளி மற்றும் ஆனைவிளுந்தான்குளம் மெதடிஷ் திருச்சபை தேவாலயத்தின் வளாகங்களில் சிரமதான பணிகள் இடம்பெற்றன.
மேலும் 652 ஆவது படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் இம் மாதம் (11) ஆம் திகதி காலை 652 ஆவது படைத் தலைமையகத்தில் தற்கால பாதுகாப்பு நிலவரம் தொடர்பாக ஆராய்வதற்காக பாதுகாப்பு ஒன்றுகூடல் நிகழ்வானது ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன. இந்த ஒன்றுகூடலில் 14 கிறிஸ்தவ மதகுருமார்கள் 20 ஆவது விஜயபாகு காலாட் படையணி, 7 ஆவது தேசிய பாதுகாப்பு படையணியைச் சேர்ந்த படை வீரர்கள் இணைந்திருந்தனர்.
ஆரோக்கியபுரம் சமூக நிலைய வளாகத்தினுள் 7 ஆவது தேசிய பாதுகாப்பு படையணியின் பங்களிப்புடன் சிரமதான பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
அரவிளாந்தன்குளம் சந்தியில் 652 ஆவது படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் தண்ணீர் டாங்கிகள் மூலம் குடிநீர்கள் இம் மாதம் (7) ஆம் திகதி வழங்கி வைக்கப்பட்டன.
மேலும் 65 ஆவது படைப் பிரிவின் ஏற்பாட்டில் மல்லாவி, துனுக்காய், முழங்காவில், அரவிளானந்தன்குளம், பள்ளநகர், நாச்சிகுடா, ஸ்கந்தபுரம் மற்றும அக்கராயம்குளம் பிரதேசங்களில் டெங்கு ஒழிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இதன் போது துனுக்காய், பூநகிரி, மாந்தை கிழக்கு மற்றும் மேற்கு கரச்சி பிரதேச செயலகத்திற்குரிய பிரதேச செயலக ஊழியர்களும் பங்கேற்றுக் கொண்டனர்.Nike footwear | 【発売情報】 近日発売予定のナイキストア オンライン リストックまとめ - スニーカーウォーズ