15th October 2019 14:20:00 Hours
கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் விஜித ரவிப்பிரிய அவர்களது வழிக்காட்டலின் கீழ் 571 ஆவது படைத் தலைமையகத்தின் கட்டளை தளபதி கேர்ணல் D.K.S.K தொலகே அவர்களது தலைமையில் கிளிநொச்சி மற்றும் மலையாளபுரம் பிரதேசங்களிலுள்ள வாழ்வாதாரத்தில் பின் தங்கிய குடும்பத்தைச் சேர்ந்த நபர்கள் 223 பேருக்கு மரக்கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டன.
இம் மாதம் (9) ஆம் திகதி மா, பலா,தென்னம், பனை, மீ , மார்கோசா, முந்திரி மரக்கன்றுகள் 571 ஆவது படைத் தலைமையகத்தின் கட்டளை தளபதி அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டன.
இந்த நிகழ்வில் 7 ஆவது இலேசாயுத காலாட் படையணி, 9 ஆவது விஜயபாகு காலாட் படையணியின் கட்டளை அதிகாரிகள் மற்றும் இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் இணைந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.Best Nike Sneakers | Jordan Ανδρικά • Summer SALE έως -50%