Header

Sri Lanka Army

Defender of the Nation

15th October 2019 14:15:00 Hours

விடைபெற்றுச் செல்லும் கிழக்கு தளபதிக்கு கௌரவ மரியாதைகள்

இலங்கை இராணுவத்தில் 34 வருடங்கள் சேவை புரிந்து இராணுவத்திலிருந்து விடைபெற்றுச் செல்லவிருக்கும் கிழக்கு பாதுகாப்பு படைத் தளபதியான மேஜர் ஜெனரல் அருன ஜயசேகர அவர்களுக்கு வெலிகந்தையில் அமைந்துள்ள கிழக்கு பாதுகாப்பு தலைமையகத்தில் இம் மாதம் 14 ஆம் திகதி கௌரவ மரியாதைகள் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.

கிழக்கு பாதுகாப்பு படைத் தளபதிக்கு 4 ஆவது கெமுனு காலாட் படையணியினால் இராணுவ சம்பிரதாய முறைப்படி அணிவகுப்பு மரியாதைகள் வழங்கி வைக்கப்பட்டன.

பின்னர் கிழக்கு தளபதியினால் தலைமையக வளாகத்தினுள் மரநடுகைகள் மேற்கொள்ளப்பட்டு படையினர் மத்தியில் உரையையும் நிகழ்த்தினார். பின்பு தலைமையகத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட தேநீர் விருந்துபசார நிகழ்விலும் தளபதி இணைந்து கொண்டார். இச்சந்தர்ப்பத்தில் கிழக்கு முன்னரங்க பாதுகாப்பு கட்டளை தளபதி, படைத் தளபதிகள், கட்டளை தளபதிகள், கட்டளை அதிகாரிகள் மற்றும் இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் இணைந்திருந்தனர்.

மேலும் அன்றைய தினம் தலைமையக அதிகாரி விடுதியில் இடம்பெற்ற இரவு விருந்தோம்பல் நிகழ்விலும் தளபதி கலந்து கொண்டார்.

இச்சந்தர்ப்பத்தில் கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் நிர்வாகம் மற்றும் விநியோக பிரதானி பிரிகேடியர் மைக்கல் வன்னியாரச்சி அவர்களினால் கிழக்கு தளபதிக்கு நினைவு பரிசொன்றும வழங்கி வைத்து கௌரவித்தார்.

பின்னர் கிழக்கு தளபதி அவர்களினால் பிரமுகர்களின் வருகையை முன்னிட்டு கையொப்பமிடும் புத்தகத்திலும் கையொப்பமிட்டு தனது பதவியை உத்தியோக பூர்வமாக பாரமளித்தார். இம் மாதம் 15 ஆம் திகதி கிழக்கு தளபதி அவர்கள் கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்திலிருந்து விடை பெற்றுச் சென்றார். Running sport media | Klær Nike