Header

Sri Lanka Army

Defender of the Nation

15th October 2019 14:30:00 Hours

இலங்கை இராணுவ போர்கருவி படையணியின் 70 ஆவது ஆண்டு நிறைவு விழா

இலங்கை இராணுவ போர்கருவி படையணியின் 70 ஆவது ஆண்டு நிறைவு விழாவானது இம் மாதம் (14) ஆம் திகதி தொம்பகொடையில் அமைந்துள்ள தலைமையகத்தில் இடம்பெற்றது. இந்த நிகழ்விற்கு இந்தியா இராணுவத்தின் போர்கருவி பணிப்பாளர் நாயகமான லெப்டினன்ட் ஜெனரல் தலீப் சிங் ரதோர் விஎஸ்எம் அவர்கள் வருகை தந்து சிறப்பித்தார்.

போர்கருவி படைத் தலைமையகத்திற்கு வருகை தந்த இந்திய இராணுவ பிரதானிக்கு இலங்கை இராணுவ படை வீரர்களினால் இராணுவ சம்பிரதாய முறைப்படி அணிவகுப்பு வழங்கி கௌரவித்து வரவேற்கப்பட்டார்.

பின்னர் இந்திய இராணுவ பிரதானியவர்கள் தலைமையக வளாகத்தினுள் உள்ள ஆயுத களஞ்சியசாலை , நவீன அறைகள் மற்றும் கிரிக்கட் தொகுதிகளை பார்வையிட்டு தலைமையக வளாகத்தினுள் இந்திய உயரதிகாரியினால் மரநடுகைகள் மேற்கொள்ளப்பட்டன.

இராணுவ போர்கருவி படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் H.G.I வித்தியானந்த அவர்கள் இந்திய இராணுவ பிரதானியுடன் கலந்துரையாடலை மேற்கொண்டார்.

அன்றைய தினம் 70 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு தலைமைய அதிகாரி விடுதியில் இடம்பெற்ற இரவு விருந்தோம்பல் நிகழ்விலும் இந்தியா இராணுவத்தின் போர்கருவி பணிப்பாளர் நாயகமான லெப்டினன்ட் ஜெனரல் தலீப் சிங் ரதோர் அவர்கள் கலந்து கொண்டார். Running sport media | Women's Designer Sneakers - Luxury Shopping