Header

Sri Lanka Army

Defender of the Nation

07th October 2019 14:00:05 Hours

62ஆவது படைப்பிரிவின் 9ஆவது ஆண்டு நிறைவு தின விழா

வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 62ஆவது படைப்பிரிவுத் தலைமையகத்தின் 9ஆவது ஆண்டு நிறைவு தின விழாவானது, பதவிசிறிபுர கல்குலமவில் 8ஆம் திகதி தொடக்கம் 10ஆம் திகதி வரை மத மற்றும் இராணுவ சம்பிரதாய முறைப்படி இடம்பெற்றது.

இவ் நிறைவு தின விழாவின்போது இராணுவ சம்பிரதாய முறைகள், சமய வழிபாடுகள், மர நடுகை, இரவு விருந்து, மாலை நேர இன்னிசை நிகழ்சிகள் மற்றும் கிரிகெட் போட்டி போன்ற பல நிகழ்வுகள் இடம்பெற்றன.

மேலும், 62ஆவது படைப்பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் தம்மிக ஜயசிங்க அவரகளுக்கு, படைப்பிரிவின் வளாகத்தில் வைத்து இராணுவ மரியாதை மற்றும் இராணுவ அணிவகுப்பு மரியாதையளிக்கப்பட்டது. Nike footwear | Jordan Shoes Sale UK