Header

Sri Lanka Army

Defender of the Nation

07th October 2019 13:30:05 Hours

மாணவர்கள் மற்றும் கரப்பந்தாட்ட வீரர்களுக்கு ஊக்குவிப்பு பயிற்சிகள்

முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 64 ஆவது படைப் பிரிவின் ஏற்பாட்டில் இம் மாதம் 4-5 ஆம் திகதிகளில் கரப்பந்தாட்ட பயிற்சிகள் 64 ஆவது படைப் பிரிவு மைதானத்தில் இடம்பெற்றன.

இந்த பயிற்சியில் மாணவர்கள், கழகங்களைச் சேர்ந்த 500 கரப்பந்தாட்ட வீரர்கள் இணைந்து கொண்டுள்ளதுடன். 48 கரப்பந்தாட்ட பயிற்றுவிப்பாளர்களின் பங்களிப்புடன் இந்த பயிற்சிகள் இடம்பெற்றன.

இந்த பயிற்சி ஆரம்ப நிகழ்வினை ஆரம்பித்து வைப்பதற்காக 64 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் கீர்த்தி கொஷ்தா அவர்களது அழைப்பையேற்று முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜயந்த செனவிரத்ன அவர்கள் வருகை தந்து சிறப்பித்தார்.Sneakers Store | Sneakers