Header

Sri Lanka Army

Defender of the Nation

08th October 2019 13:10:05 Hours

இராணுவ தளபதி முன்பள்ளி கட்டுவதற்கான நிதிகள் வழங்கி வைப்பு

இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களது ஏற்பாட்டில் அரியாலை பூம்புகர் சண்முகா முன்பள்ளியில் கட்டிடம் நிர்மானிப்பதற்கான உதவிகள் யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் மேற்கொள்ளப்படவுள்ளன.

லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் அமெரிக்காவிலுள்ள திரு சேனக அமரநாயக அவர்களுடன் தொடர்பு கொண்டு இந்த புதிய கட்டிடங்களை நிர்மானிப்பதற்கான நிதி உதவிகளை பெற்றுக் கொடுத்தார்.

இந்த புதிய கட்டிடம் அமைப்பதற்காக அடிக்கல் நாட்டு விழா இம் மாதம் (7) ஆம் திகதி இடம்பெற்றன. இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவன் வணிகசூரிய அவர்கள் வருகை தந்து அடிக்கல்லை நாட்டி வைத்தார்.

மேலும் இந்த நிகழ்வில் 52 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மற்றும் இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்கள் இணைந்திருந்தனர். Adidas shoes | adidas Campus 80s South Park Towelie - GZ9177