07th October 2019 12:49:05 Hours
ரஷியாவில் இடம்பெற்ற ரஷியா –பேஷ் ‘ஆமி ஹேம்ஷ்’ போட்டிகளில் இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த கொமாண்டோ மற்றும் விஷேட படையணியைச் சேர்ந்த பரிசூட் வீரர்கள் லெப்டினன்ட் கேர்ணல் காஞ்சனா வீரசேகர அவர்களது தலைமையில் பங்கேற்றுக் கொண்டனர்.
இந்த போட்டிகள் ஐந்தாவது தடவையாக ரஷியாவில் ஓகஸ்ட் மாதம் 3 – 17 ஆம் வரை 39 நாடுகளின் பங்களிப்புடன் இடம்பெற்றன. இலங்கை இராணுவமானது முதல் தடவையாக இந்த போட்டிகளில் பங்கேற்றிக் கொண்டு வெண்கல பதக்கங்களை பெற்றுள்ளனர்.
தனிநபர் துல்லி தரையிறங்கும் நிகழ்வில் போட்டியிடும் இலங்கை அணி, 21 நாடுகளுக்கு எதிராக போட்டியிட்டு வெண்கலப் பதக்கத்தை வென்று எமது நாட்டிற்கு பெருமையை சேர்த்து தந்துள்ளனர்.
போட்டிகளில் இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த லெப்டினன்ட் கேர்ணல் W.B.M.K.G.K வீரசேகர, மேஜர் W.M.N.T குலதுங்க மேஜர் R.H.J.P வாமபுர, பதவிநிலை சாஜன் A.L.A பிரேமலால், சாஜன் P.D.N.P சேனாரத்ன, சாஜன் A.P கங்காஹெதர, சாஜன் I.G.A சமன் குமார மற்றும் கோப்ரல் L.R.N பண்டார அவர்கள் பங்கேற்றுக் கொண்டனர். latest Running Sneakers | New Jordans – Air Jordan 2021 Release Dates , Gov