07th October 2019 12:35:39 Hours
மாதுறு ஓயாவிலுள்ள இராணுவ பயிற்சி பாடசாலையினால் மேற்கொண்ட விஷேட காலாட் நடவடிக்கை பயிற்சி நிறைவு விழாவானது இம் மாதம் (5) ஆம் திகதி இடம்பெற்றன.
இந்த பயிற்சியானது இல – 68 இன் கீழ் பதினொரு அதிகாரிகள் மற்றும் 259 படையினர்களது பங்களிப்புடன் மாதுறுஓயா இராணுவ பயிற்சி பாடசாலையில் இடம்பெற்றன.
மாதுறுஓயா பயிற்சி பாடசாலையின் கட்டளை தளபதி பிரிகேடியர் S.P.K.A பிலபிடிய அவர்கள் இந்த பயிற்சி நிறைவு விழாவிற்கு பிரதம அதிதியாக வருகை தந்து சிறப்பித்தார்.
இந்த பயிற்சியில் அனைத்து துறைகளிலும் சிறந்த அதிகாரியாக கெமுனு காலாட் படையணியைச் சேர்ந்த லெப்டினன்ட் T.C சேரசிங்கவும், சிறந்த துப்பாக்கி சூட்டாளராக 18 ஆவது தேசிய பாதுகாப்பு படையணியைச் சேர்ந்த கெப்டன் K.Y.M.S தர்மசிறி அவர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
படையினர்களுக்கான அனைத்து துறைகளிலும் சிறந்த வீரனாக 21 ஆவது சிங்கப் படையணியைச் சேர்ந்த கோப்ரல் K.G.A.B விஜயசோமவும் 19 ஆவது இலங்கை இலேசாயுத காலாட் படையணியும் சிறந்த படையணியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
இந்த நிகழ்வில் இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள், பெற்றோர்கள் மற்றும் பார்வையாளர்கள் பங்கேற்றிக் கொண்டனர். Sports brands | 【11月発売予定】シュプリーム × ナイキ エアフォース1 全3色 - スニーカーウォーズ