07th October 2019 12:47:05 Hours
அண்மையில் நடந்த ‘சஹாசக் நிமாவும் - 2019’ கண்காட்சியில் இராணுவ கண்டுபிடிப்பாளர்கள் முன் வைத்த 28 தயாரிப்பு உபகரணங்களில் ஆறு புதிய கண்டு பிடிப்பு உபகரணங்களுக்கு வெள்ளி மற்றும் வெண்கல பதக்கங்கள் கிடைக்கப் பெற்றதாக பாதுகாப்பு அமைச்சின் மறு ஆய்வு பகுப்பாய்வு திட்டம் மற்றும் மேம்பாட்டு கிளையானது தெரிவித்துள்ளது.
இலங்கை இராணுவத்திலுள்ள பாதுகாப்பு படைத் தலைமையகங்களுக்கு கீழுள்ள படையணிகளில் உள்ள படையினர்களினால் கடந்த செப்டம்பர் மாதம் 20 22 ஆம் திகதி வரை கொழும்பு கண்காட்சி மகாநாட்டு நிலையத்தில் ‘சஹாசக் நிமாவும் - 2019’ கண்காட்சிகளில் இராணுவத்தினரால் முன் வைக்கப்பட்ட 6 கண்டு பிடிப்பு உபகரணங்களிற்கு வெள்ளி மற்றும் வெண்கல பதக்கங்கள் கிடைக்கப் பெற்றன.
வெள்ளிப் பதக்கங்களை கன்னொருவிலுள்ள இலங்கை மின்சார பொறியியல் பயிற்சி முகாமைச் சேர்ந்த ஆணைச்சீட்டு உத்தியோகத்தர் 1 S.A சமந்த, லான்ஸ் கோப்ரல் N.W விஜயகோன், போர் வீரன் S.S விக்ரமகே அவர்கள் பெற்றுக் கொண்டனர்.
கள மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ குழுக்களுக்கான குளிர்பான போத்தல்களை கண்டு பிடித்த ஆராய்ச்சி பகுப்பாய்வு திட்டம் மற்றும் மேம்பாட்டு கிளையைச் சேர்ந்த கெப்டன் D.M.P.M தசநாயகவிற்கும், கையால் இயக்கப்படும் வாகன சோதனை கெமராவை கண்டு பிடித்த 7 ஆவது இலங்கை பொறியியல் படையணியைச் சேர்ந்த மேஜர் M.D.J விக்ரமாரச்சிக்கும், உணவு பதப்படுத்தும் எளிதாக கையாளும் இயந்திரத்தை கண்டு பிடித்த 3 ஆவது மின்சார பொறியியல் படையணியைச் சேர்ந்த கோப்ரல் M.D துமிந்தவிற்கும், தேங்காய் உமி அகற்றும் இயந்திரத்தை கண்டு பிடித்த இராணுவ சேவைப் படையணியைச் சேர்ந்த லான்ஸ் கோப்ரல் A.S.S சுகந்தவிற்கும், மின்சார மேசையை கண்டு பிடித்த 1 ஆவது இலங்கை ரயிபல் படையணியைச் சேர்ந்த போர் வீரன் T.G எட்வட் போன்றோர்களுக்கு வெண்கல பதக்கங்கள் கிடைக்கப் பெற்றன. Sports brands | NIKE AIR HUARACHE