04th October 2019 18:53:22 Hours
கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 663 காலாட் படைத் தலைமையகத்தின் 9 ஆவது ஆண்டு நிறைவு விழா இம் மாதம் (2) ஆம் திகதி இந்த படையணியின் கட்டளைத் தளபதியான கேர்ணல் சுபாஷன் லியனகம அவர்களது தலைமையில் இடம்பெற்றன.
இந்த ஆண்டு நிறைவை முன்னிட்டு பௌத்த மத வழிபாடுகள் தலைமையக வாளகத்தினுள்ளும், இந்து சமய ஆசிர்வாத நிகழ்வுகள் ஜயபுரம் இந்து ஆலயத்திலும், கிறிஸ்தவ சமய பிறார்த்தனைகள் வல்லைப்படு கிறிஸ்தவ தேவாலயத்திலும் 1- 2 ஆம் திகதிகளில் இடம்பெற்றன.
படைத் தளபதி அவர்களுக்கு இந்த ஆண்டு நிறைவை முன்னிட்டு படையினரால் இராணுவ சம்பிரதாய முறைப்படி அணிவகுப்பு மரியாதைகள் வழங்கி வைக்கப்பட்டன. அதனை தொடர்ந்து கட்டளை தளபதி அவர்களினால் தலைமையக வளாகத்தினுள் மரநடுகை மேற்கொள்ளப்பட்டு படையினர் மத்தியில் உரையையும் நிகழ்த்தி படையினருடன் பகல் விருந்தோம்பலிலும் கலந்து சிறப்பித்தார்.
மேலும் இந்த நினைவு தினத்தை முன்னிட்டு கிரிக்கட் போட்டிகளும் இன்னிசை நிகழ்ச்சிகளும் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தனர். அச்சமயத்தில் இந்த படைத் தலைமையகத்திற்குரிய 15 ஆவது பீரங்கிப் படையணியினரும், 2 ஆவது தேசிய பாதுகாப்பு படையணியும் இந்த நிகழ்வுகளில் பங்கேற்றிக் கொண்டனர். affiliate link trace | Nike nike dunk high supreme polka dot background , Gov