04th October 2019 16:00:36 Hours
உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் கட்கோவலம் கலவன் தமிழ் வித்தியாலயத்தின் மாணவர்கள் பலாலி விமான நிலையத்தை பார்வையிடுவதற்கு சுற்றுலா பயணமொன்றை இம் மாதம் (4) ஆம் திகதி மேற்கொண்டார்.
இந்த பாடசாலையைச் சேர்ந்த 70 மாணவர்கள் இந்த சுற்றுலா பயணத்தை மேற்கொண்டனர். இவர்களுக்கு யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் தல்செவன இராணுவ விடுமுறை சுற்றுலா விடுதியில் பகல் உணவுகள் வழங்கி வைக்கப்பட்டன.
இறுதியில் இந்த பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவன் வணிகசூரிய அவர்களை சந்தித்து உரையாடினார்கள் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். Nike shoes | New Releases Nike