04th October 2019 18:55:22 Hours
62 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் J.M.U.D ஜயசிங்க அவர்களின் வழிக்காட்டலின் 621 ஆவது படைத் தலைமையகத்தின் பூரன ஏற்பாட்டில் வெலிஓயா பிரதேசத்திலுள்ள வாகல்கட முன்பள்ளி மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் இம் மாதம் (4) ஆம் திகதி நன்கொடையாக வழங்கி வைக்கப்பட்டன.
முதலாம் தரம் தொடக்கம் ஐந்தாம் தரம் வரையுள்ள மாணவர்கள் 130 பேருக்கு இந்த பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன. இந்த பாடசாலை உபகரணத்தினுள் பாடசாலை பைகள், தண்ணீர் போத்தல்கள், சாப்பாட்டு பெட்டிகள், புத்தகங்கள், கடதாசிகள் போன்ற பொருட்கள் உள்ளடக்கப்பட்டிருந்தன.
நீர்கொழும்பு சிஹிரி குரூப் தனியார் நிறுவனத்தின் அனுசரனையில் இராணுவத்தினரது ஒத்துழைப்புடன் இந்த பாடசாலை பொருட்கள் விநியோகிக்கப்பட்டன.
இந்த நிகழ்வில் 62 ஆவது படைத் தளபதி, 621 ஆவது கட்டளைத் தளபதி, 14 ஆவது (தொ) இலங்கை இலேசாயுத காலாட் படையணி, 17 ஆவது இலங்கை தேசிய பாதுகாப்பு படையணியைச் சேர்ந்த கட்டளை அதிகாரிகள் இணைந்து கொண்டனர்.
இந்த பாடசாலையில் (3) ஆம் திகதி படையினரால் சிரமதான பணிகள் மேற்கொள்ளப்பட்டன என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். affiliate link trace | シューズ