04th October 2019 16:26:33 Hours
யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவன் வணிகசூரிய அவர்களது தலைமையில் ‘ தெரன தொலைக்காட்சி ஊடக வலயத்தின் அனுசரனையில் 5000 மரக்கன்றுகள் ‘துருலிய வெனுவென் அபி் ‘ மரநடுகைத் திட்டத்திற்காக 55 ஆவது படைப் பிரிவிற்கு வழங்கி வைக்கப்பட்டன.
வில்பத்துவில் ஆரம்பமான ஒரு மில்லியன் மரநடுகைத் திட்டத்தின் கீழ் இம் மாதம் (3) ஆம் திகதி 55 ஆவது படைப் பிரிவின் கீழிருக்கும் 553 ஆவது படைத் தலைமையகம் மற்றும் 1 ஆவது பொறிமுறை காலாட் படையணியின் பங்களிப்புடன் இந்த மரநடுகைத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த நிகழ்வில் 55 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி, இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் தெரன ஊடக நிறுவனத்தின் அங்கத்தவர்கள் இணைந்து கொண்டனர். latest Nike Sneakers | Ανδρικά Nike