Header

Sri Lanka Army

Defender of the Nation

03rd October 2019 13:36:00 Hours

ஆங்கில பயிற்சிநெறி நிறைவு நிகழ்வு

யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் இரண்டு மாத காலமாக இடம்பெற்ற அடிப்படை ஆங்கில பயிற்சி நெறியின் நிறைவு விழாவானது இம் மாதம் (2) ஆம் திகதி யாழ் தலைமையக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இந்த பயிற்சி நெறியானது 2019 ஜூலை மாதம் 11 ஆம் திகதி 29 இராணுவ அங்கத்தவர்களது பங்களிப்புடன் ஆரம்பமானது. இப் பயிற்சியில் சிறந்த பெறுபேறுகளை பெற்றுக் கொண்டு முதலாவது இடத்தை 12 ஆவது கெமுனு காலாட் படையணியைச் சேர்ந்த லான்ஸ் கோப்ரல் எம் ஆர் பீரிசும், இரண்டாவது இடத்தை 4 ஆவது மருத்துவ படையணியின் போர் வீரங்கானையான கே.எம்.ஏ மதுஷானியும், மூன்றாவது இடத்தை 4 ஆவது இராணுவ பொலிஸ் படையணியைச் சேர்ந்த லான்ஸ் கோப்ரல் டி எம் ஏ என் தென்னகோன் அவர்களும் பெற்றுக் கொண்டனர்.

பயிற்சி நிறைவு விழாவிற்கு பிரதம அதிதியாக யாழ் பாதுகாப்பு படைத் தளபதியவர்கள் வருகை தந்து தேர்ச்சி பெற்ற படை வீர, வீராங்கனைகளுக்கு சான்றிதழ்களை வழங்கி பாராட்டி கௌரவித்தார்.

மேலும் இந்த நிகழ்வில் 55, 52 ஆவது படைத் தளபதிகள், யாழ் படைத் தலைமையகத்தின் பிரிகேடியர் தரத்திலுள்ள பொது நிர்வாக அதிகாரி, கட்டளைத் தளபதிகள் மற்றும் இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் இணைந்திருந்தனர். affiliate link trace | jordan Release Dates