03rd October 2019 13:35:00 Hours
வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் படையினர்களுக்கு வன்னி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் குணவர்தன அவர்களது ஏற்பாட்டில் ‘பெற்றோர் மற்றும் குழந்தைகளுக்கு இடையிலான குடும்ப உறவை மேம்படுத்துதல்’ எனும் தொணிப் பொருளின் கீழ் விரிவுரைகள் இம் மாதம் (3) ஆம் திகதி இடம்பெற்றன.
இந்த செயலமர்வானது வன்னி பாதுகாப்பு படைத் தலைமையக கேட்போர் கூடத்தில் 750 இராணுவ அங்கத்தவர்களது பங்களிப்புடன் இடம்பெற்றது.
உலக சிறுவர் தினம் மற்றும் உலக போதைப்பொருள் எதிர்ப்பு தினம்) ஆகியவற்றுடன் 'சுமிதுரு தேவகின் – தினவமு தருவன்' எனும் ஜனாதிபதி செயலக திட்டத்தின் கீழ் இடம்பெற்றன.
வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் உயரதிகாரியான பிரிகேடியர் ஆர் எம் பி ஜே ரத்னாயக அவர்களது வேண்டுகோளுக்கமைய இராணுவ உளவியல் பணியகத்தின் ஏற்பாட்டில் இந்த விரிவுரை நிகழ்ச்சி திட்டம் மேற்கொள்ளப்பட்டன.
இந்த விரிவுரைகளை இராணுவ உளவியல் பணியகத்தின் உயரதிகாரியான லெப்டினன்ட் கேர்ணல் பீ ஜி எஸ் சமந்தி அவர்கள் ஆற்றினார். Nike shoes | Sneakers