Header

Sri Lanka Army

Defender of the Nation

03rd October 2019 10:50:51 Hours

புதிய கட்டளைத் தளபதி பதவியேற்பு

இலங்கை இலேசாயுத காலாட் படையணியைச் சேர்ந்த கேர்ணல் வசந்த லியனவடுகே அவர்கள் 232 ஆவது படைத் தலைமையகத்தின் புதிய கட்டளைத் தளபதியாக இம் மாதம் தரவிகுளம் தொப்பிகலையில் அமைந்துள்ள தலைமையகத்தில் உத்தியோக பூர்வமாக தனது பதவியை பொறுப்பேற்றார்.

புதிதாய் பதவியேற்ற படைத் தளபதிக்கு தலைமையகத்தில் இராணுவ சம்பிரதாய முறைப்படி அணிவகுப்பு மரியாதைகள் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

பின்னர் புதிய கட்டளைத் தளபதி அவர்களினால் சமய ஆசிர்வாத அனுஷ்டானங்களின் பின்னர் தனது பதவியை கையொப்பமிட்டு பொறுப்பேற்றுக் கொண்டார். அதன் பின்னர் தலைமையக வளாகத்தினுள் மரநடுகை மேற்கொண்டு, படையினர் மத்தியில் உரையையும் நிகழ்த்தி படையினரால் ஒழுங்கு செய்யப்பட்ட தேநீர் விருந்தோம்பலிலும் இணைந்து கொண்டார்.

இந்த படைத் தலைமையகத்தின் முன்னாள் கட்டளைத் தளபதியாக கேர்ணல் ரொஷான் ஜயமான்ன அவர்கள் கடமை வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். Best Authentic Sneakers | Nike Off-White