Header

Sri Lanka Army

Defender of the Nation

03rd October 2019 10:36:51 Hours

முல்லைத்தீவு படையினரின் ஏற்பாட்டில் ‘உலக சிறுவர் தின’ நிகழ்வு

சர்வதேச மாவட்ட லயன்ஸ் கழகத்தினர் (306 A – 1) ஒருங்கிணைப்புடன் நிதி அனுசரனையுடன் 68 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஏ. எஸ் ஆரியசிங்க அவர்களது பூரன ஏற்பாட்டுடன் ‘உலக சிறுவர் தின நிகழ்வுகள் முல்லைத்தீவு பிரதேசத்திலுள்ள வென்னவில் ஶ்ரீ முருகானந்த வித்தியாலயம் மற்றும் மந்துவில் அரசரத்தினம் வித்தியாலயத்தில் இம் மாதம் (1) ஆம் திகதி இடம்பெற்றது.

முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜயந்த செனவிரத்ன அவர்களது வழிக்காட்டலின் கீழ் இந்த பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் நன்கொடையாக வழங்கி வைக்கப்பட்டன.

பாடசாலை உபகரணங்களான புத்தகங்கள், காலணிகள், சொக்‌ஷ், பேனா, பென்சில், பாடசாலை பைகள் வழங்கி வைக்கப்பட்டன. இந்த உபகரணங்கள் 942,720/= ரூபா பெறுமதி மிக்க வாய்ந்தது.

இந்த நிகழ்வில் சர்வதேச லயன்ஸ் கழகத்தின் தலைவர் சிறிலால் பெர்ணாண்டோ, 68 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஏ. எஸ் ஆரியசிங்க, புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர், கல்வி வலய பணிப்பாளர், 682 ஆவது படைப் பிரிவின் கட்டளை தளபதி கேர்ணல் எஸ் கஸ்தூரிமுதலி, 683 ஆவது படைத் தலைமையகத்தின் கட்டளை தளபதி கேர்ணல் சி எஸ் முனசிங்க, கேர்ணல் நலீன் ஹெட்டியாரச்சி, லயன்ஸ் கழக உறுப்பினர்கள் ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் இணைந்திருந்தனர். Running Sneakers | Autres