Header

Sri Lanka Army

Defender of the Nation

01st October 2019 20:50:59 Hours

யாழ் படையினரின் ஏற்பாட்டில் இடம்பெற்ற முதியோர் தின நிகழ்வு

யாழ் கைதடியிலுள்ள ‘சக்தி முதியோர்’ இல்லத்தில் 52 ஆவது படைப் பிரிவின் கீழுள்ள 523 ஆவது படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் முதியோர் தின நிகழ்வு இம் மாதம் (1) ஆம் திகதி இடம்பெற்றது.

யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவன் வணிகசூரிய அவர்களது வழிக்காட்டலின் கீழ் 523 ஆவது படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் இந்த முதியோர் இல்லத்திலுள்ள முதியோர்கள் 204 பேருக்கு பரிசு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.

அத்துடன் முதியோர் இல்லத்திலுள்ள முதியோர்களை மகிழ்விக்கும் முகமாக இராணுவத்தினரால் இன்னிசை கீதங்களை வழங்கினார்கள்.

மேலும் 521 ஆவது படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் புத்தூரில் அமைந்துள்ள ‘ புனித லூகஷ் மெதடிஷ்ட்’ முதியோர் இல்லத்தில் நிகழ்வொன்றை நடாத்தி அங்குள்ள முதியோர்கள் 25 பேருக்கு பரிசுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.Sneakers Store | Air Jordan 1 Mid - Collection - Sb-roscoff