Header

Sri Lanka Army

Defender of the Nation

02nd October 2019 17:34:08 Hours

இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகரினால் கணினி மற்றும் அச்சுப்பொறிகள் வழங்கி வைப்பு

இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் கௌரவ கலாநிதி அஹ்மது ஹஸ்மத் அவர்கள் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களை இன்று காலை (2) இராணுவ தலைமையகத்தில் சந்தித்து பாகிஸ்தான் மற்றும் இலங்கை இராணுவத்திங்கிடையிலான இருதரப்பு ஒத்துழைப்பு மற்றும் சிறந்த புரிந்துணர்வுகளைப்பற்றி தெரிவித்ததுடன், தியத்தலாவையிலுள்ள இலங்கை இராணுவக் கல்லூரியின் கற்றல் தேவைகளுக்காக புதிய கணினிகள் மற்றும் அச்சுப்பொறிகள் உட்பட தகவல் தொழில் நுட்ப உதிரிப்பாகங்களை வழங்கி வைத்தார்.

மேலும், லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள், பாகிஸ்தான் இராணுவத்தினருடைய நல்லெண்ண செயற்பாடுகள் பற்றி தெரிவித்ததோடு இருதரப்பினருக்குமிடையிலான நட்புறவு மற்றும் பல பயிற்சி பரிமாற்றங்களை பற்றியும் தெரிவித்தார். மேலும் பாகிஸ்தான் அரசானது கடந்த இரண்டு தசாப்தங்களாக இலங்கை இராணுவத்திற்கு தொடச்சியாக வழங்கிய ஒத்துழைப்புக்காக தனது நன்றியினையும் தெரிவித்தார். மேலும் இங்கையானது 2000ஆண்டளவில் பயங்கரவாத அச்சுறுத்தலுக்கு முகம்கொடுக்கு; வேலையில் பாகிஸ்தான் இலங்கைக்;கு வழங்கிய உதவிகளை பற்றியும் நினைவுகூர்ந்தார்.

இக்கலந்துறையாடலின்போது உயர்ஸ்தானிகரினால், உதிரிப்பாகங்களை உள்ளடக்கிய ஒரு பெட்டி கையளிக்கப்பட்டதோடு, இலங்கை இராணுவக் கல்லூரியின் எதிர்கால உயர்வுக்காக தனது வாழ்த்துக்களையும் தெரிவித்தார். அதனைத் தொடந்து தளபதியினால் உயர்ஸ்தானிகருக்கு ஒரு நினைவுச் சினனம் வழங்கப்பட்டது.

இராணுவக் கல்லூரியின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் எஸ்.கே. ஈஸ்வரன், மற்றும் பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கேணல் சஜாட் அலி ஆகியோர் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கவிடயமாகும். Buy Kicks | Entrainement Nike