Header

Sri Lanka Army

Defender of the Nation

29th September 2019 19:00:14 Hours

661 ஆவது கொமான்டோ தலைமையகத்தினால் அனர்த்த முகாமைத்துவ பயிற்சிகள்

66 ஆவது படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 661 ஆவது கொமாண்டோ படைத் தலைமையகத்தினால் கடந்த செப்டம்பர் மாதம் 24 – 27 ஆம் திகதி வரை அரசபுரகுளத்தில் உள்ள பட்டாலியன் பயிற்சி பாடசாலையில் அனர்த்த முகாமைத்துவ பயிற்சிகள் இடம்பெற்றது.

இந்த பயிற்சியானது 66 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி பிரிகேடியர் மங்கள விஜயசுந்தர அவர்களது வழிக் காட்டலின் கீழ் 661 ஆவது படைத் தலைமையகத்தின் கட்டளை தளபதி கேர்ணல் மதுர விக்ரமரத்ன அவர்களது தலைமையில் இடம்பெற்றது.

இந்த பயிற்சியானது நான்கு நாட்கள் எட்டுப் பேரைக் கொண்ட குழுவினருடன் வெள்ளம், மண்சரிவு, சுனாமி, வரட்சி தொடர்பாக ஏற்படும் அனர்த்தங்களின் போது எப்படி முகமளிப்பது தொடர்பாக படையினரால் நடாத்தப்பட்டது. short url link | nike air force 1 shadow , eBay