01st October 2019 20:35:59 Hours
மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தினால் சர்வதேச முதியோர் தினத்தை முன்னிட்டு கடுவெலையிலுள்ள ‘வில்பட் பெரேரா’ முதியோர் இல்லத்தில் செப்டம்பர் மாதம் (30) ஆம் திகதி நிகழ்வுகள் இடம்பெற்றது.
மேற்கு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த முதலிகே அவர்களது தலைமையில் பனாகொட இராணுவ வைத்தியசாலையின் ஒத்துழைப்புடன் முதியோர் இல்லத்திலுள்ள முதியோர்களுக்கு மருத்துவ சேவைகள் வழங்கி வைக்கப்பட்டன.
அத்துடன் இராணுவத்தினரது பங்களிப்புடன் முதியோர் இல்ல வளாகத்தினுள் சிரமதான பணிகள் மேற்கொண்டு பின்னர் படையினரால் இன்னிசை கீதங்களும் வழங்கி இந்த முதியோர்களை மகிழ்வித்தனர்.
மேலும் மேற்கு பாதுகாப்பு படைத் தளபதியான மேஜர் ஜெனரல் முதலிகே அவர்கள் இந்த முதியோர்களுக்கு பரிசுப் பொதிகளையும் வழங்கி வைத்தார். இச்சந்தர்ப்பத்தில் மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் பதவி நிலை அதிகாரி, மற்றும் விநியோக அதிகாரிகளும் இணைந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். Sport media | Gifts for Runners