02nd October 2019 17:35:06 Hours
உலக சிறுவர் தினத்தை நினைவுகூரும் முகமாக ஆதரவற்ற குழந்தைகளை பாதுகாப்பதற்காக 10 மில்லியன் நிதியன்பளிப்பானது ஜனாதிபதி செயலகத்தில் வைத்து மேன்மை தங்கிய ஜனாதிபதியவர்களுக்கு இம் மாதம் (1) ஆம் திகதி காலை உத்தியோக பூர்வமாக கையளிக்கப்பட்டன.
இந்த நிதியானது இராணுவ ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காகவும், ஆதரவற்ற குழந்தைகளை வளரச்சியடையச் செய்யும் நோக்கத்துடன் இராணுவ பொது நிர்வாக பிரதானி மேஜர் ஜெனரல் ரோகித தர்மசிறி அவர்களினால் ஜனாதிபதிக்கு வழங்கி வைக்கப்பட்டன.
செவ்வாய்க்கிழமை (1) திறந்து வைக்கப்பட்ட அறக்கட்டளைச் சட்டத்தின் கீழ் அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது, இது ஜனாதிபதியின் செயலாளர், நிதி அமைச்சின் செயலாளர் மற்றும் குழந்தைகள் விவகார அமைச்சின் செயலாளர் ஆகியோரால் நிர்வகிக்கப்பட உள்ளது. இந்த அறக்கட்டளையின் நிதி மூலம் கிடைக்கும் வட்டி அறக்கட்டளைக்கு கிடைக்கும் வருமானத்தை வரிகளிலிருந்து விலக்கி அளித்த பின்னர் திட்டத்திற்காக பயன்படுத்தப்படும்.
இதே சந்தர்ப்பத்தில் இதுபோன்ற மேலும் பல நன்கொடைகள் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டன. மேலும் இந்த நிகழ்வில் இராணுவ சம்பள மற்றும் பதிவேட்டு பணியகத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் W.A.A.C.P வேரகொட அவர்களும் இணைந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். bridgemedia | 【国内5月2日発売予定】ナイキ ウィメンズ エアマックス ココ サンダル 全4色 - スニーカーウォーズ