Header

Sri Lanka Army

Defender of the Nation

29th September 2019 18:59:14 Hours

ரணவிரு எபரல் நிருவாகத்தினர் வருடாந்த சுற்றுலா பயணம்

யக்கல ரணவிரு எபரல் நிருவாகத்தினர் வருடாந்த சுற்றுலா பயணத்தை செப்டம்பர் மாதம் 20 – 21 ஆம் திகதிகளில் கதிர்காமம் மற்றும் எம்பிலிபிடிய பிரதேசங்களிற்கு மேற்கொண்டனர்.

இந்த சுற்றுலா பயணமானது ரணவிரு எபரல் மத்திய நிலையத்தின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் மஞ்சுள மனதுங்க அவர்களது பங்களிப்புடன் இடம்பெற்றது.

இந்த சுற்றுலா பயணத்தின் மூலம் ஒருவருக்கொருவரது உறவு முறைகளை மேம்படுத்தும் நோக்கத்துடன் இந்த சுபசாதனை திட்டமானது ஒவ்வொரு வருடமும் இடம்பெறுகின்றது.

கிரிவெஹர மற்றும் கதிர்காம கோயில்களிற்கு 20 ஆம் திகதி சென்று கிரிஹெகர பூசைகள் மற்றும் ‘கிலன்பச மற்றும் பிரிக்கர’ சமய சடங்குகளிலும் இவர்கள் கலந்து கொண்டு கடவுளின் ஆசிர்வாதங்களை பெற்றுக் கொண்டார்.

கதிர்காம ஆலயத்தின் காவடி நடனங்களிலும் இவர்கள் இணைந்து கொண்டு விநோதமுற்றனர். பின்பு இவர்களினால் கதிர்காமம் ஹோனாகனார மகா வித்தியாலய மாணவர்களுக்கு புத்தகங்கள் நன்கொடையாக வழங்கி வைக்கப்பட்டன.

இருபத்தொராம் திகதி காலை எம்பிலிபிடியவிலுள்ள சந்திரிகா நீர்த்தேக்கத்தில் விநோதமாக நீராடி கீதங்களை இசைத்து மகிழ்ந்தனர். ரணவிரு எபரல் நிலையத்தின் பிரதி கட்டளை தளபதி பிரிகேடியர் கபில ரணவீர அவர்களது தலைமையில் இந்த நிகழ்வுகள் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

இந்த சுற்றுலா பயணத்தில் பிரதி கட்டளை தளபதி, தொழிற்சாலை முகாமையாளர், மனித வள முகாமையாளர், தயாரிப்பு திட்டமிடல் மற்றும் பணிவு ஆய்வு முகாமையாளர் , இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் இணைந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். spy offers | Best Selling Air Jordan 1 Mid Light Smoke Grey For Sale 554724-092