30th September 2019 14:08:48 Hours
நிகவரடியிலுள்ள ஜயந்தி நவோதயா மஹா வித்தியாலயத்தில் இராணுவ பேச்சாளரும் மற்றும் ஊடக பணிப்பாளர் நாயகமுமான மேஜர் ஜெனரல் சுமித் அதபத்து அவர்களை கௌரவிக்கும் நிகழ்வானது இம் மாதம் (28) ஆம் திகதி இடம்பெற்றது.
இந்த நிகழ்விற்கு வருகை தந்த இவரை சாரனர் இலச்சினைகளை சூட்டி பாடசாலை நிர்வாகத்தினர் வரவேற்றனர்.
சமீப காலங்களில் 2,800 க்கும் மேற்பட்ட சாரணர்களை உருவாக்கிய பெயரை ஜயந்தி நவோதய மஹா வித்தியாலயம் பெற்றுள்ளது. மேஜர் ஜெனரல் அதபத்து அவர்கள் இப்பாடசாலையின் முதல் சாரணவார். இவர் இந்த பாடசாலையில் முன்னாள் மாணவராவர் இவரை கௌரவிக்கும் முகமாக இந்த நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டு இவர் நிகவரடிய மக்கள் மற்றும் அப்பிரதேச வியாபாரிகளினால் வரவேற்கப்பட்டார்.
பாடசாலைக்கு வருகை தந்த இராணுவ பேச்சாளர் அவர்கள் பாடசாலை கொடி கம்பத்திலுள்ள தேசிய கொடிகளை ஏற்றி பின்னர் மங்கள விளக்குகளை ஏற்றி பாடசாலையினுள்ள கேட்போர் கூடத்திற்கு அழைத்து செல்லப்பட்டார்.
அங்கு பாடசாலையின் அதிபரான திரு எச். எம். ஏ ஹேரத் அவர்கள் வரவேற்புரையை நிகழ்த்தினார்.
பின்னர் இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியா வருகை தந்த மேஜர் ஜெனரல் சுமித் அதபத்து அவர்களை உரையாற்றுவதற்கு மேடைக்கு அழைக்கப்பட்டார். இவரது உரையின் போது இவர் தனது இளம் சாராணராக கல்வி கற்கும் போது இடம்பெற்ற நிகழ்வுகளை நினைவு கூர்ந்து ஒழுக்கம் மற்றும் அர்ப்பணிப்பின் முக்கியதுவத்தை மாணவர்களுக்கு சுட்டிக்காட்டி தனது உரையை நிறைவு செய்தார். Running Sneakers Store | Men’s shoes