29th September 2019 10:59:14 Hours
ஆயிரத்திற்கு மேலான பார்வையாளர்களது பங்களிப்புடன் சீன ஹுபை கலாச்சார இசை மற்றும் நடன நிகழ்வானது இம் மாதம் (27) ஆம் திகதி கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் அமைந்துள்ள ‘நெலும் பியச’ கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வானது இலங்கையிலுள்ள சீனத் தூதரகம் மற்றும் இலங்கையில் சீனாவின் கலாச்சார மையத்தின் பூரன ஏற்பாட்டுடன் இடம்பெற்றது.
இராணுவத்தினர் மற்றும் பொது மக்களிடையே நல்லிணக்கத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் இந்த நிகழ்வானது கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் விஜித ரவிப்பிரிய அவர்களது வழிக்காட்டலின் கீழ் இடம்பெற்றது.
கண்ணை கவரும் சீன நடனங்கள், தற்பாதுகாப்பு கலைப் பயிற்சிகள், கலை மற்றும் புகைப்பட கண்காட்சிகளும் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் செல்வி ஆர். கேதிஸ்வரன், 65 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் வசந்த குமாரப்பெரும. 57 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் பீ. பி. எஸ் டி சில்வா, 66 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி பிரிகேடியர் எம். டி விஜயசுந்தர மற்றும் இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் இணைந்திருந்தனர். short url link | 『アディダス』に分類された記事一覧