01st October 2019 19:20:47 Hours
இராணுவ தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு உத்தியோக பூர்வமான விஜயத்தை இம் மாதம் (29) ஆம் திகதி காலை மேற்கொண்டார்.
வன்னி தலைமையகத்திற்கு வருகை தந்த இராணுவ தளபதியை வன்னி பாதுகாப்பு படைத் தளபதியான மேஜர் ஜெனரல் ஜகத் குணவர்தன அவர்கள் வரவேற்றார். பின்னர் தளபதிக்கு இராணுவ சம்பிரதாய முறைப்படி அணிவகுப்பு மரியாதைகள் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
தலைமையகத்திற்கு வருகை தந்த இராணுவ தளபதியவர்கள் அவர்களது வருகையை நினைவு படுத்தும் முகமாக தலைமையக வளாகத்தினுள் மரநடுகையை மேற்கொண்டார்.
அதனை தொடர்ந்து தலைமையக வளாகத்தினுள் அமைந்துள்ள இராணுவ நினைவு தூபிக்கு சென்று நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த படை வீரர்களை நினைவு படுத்தி மலரஞ்சலியும் செலுத்தினார்.
பின்பு படைத் தளபதிகள், பாதுகாப்பு முன்னரங்க பராமரிப்பு தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் படையணிகளைச் சேர்ந்த அதிகாரிகள் மற்றும் படையினர் மத்தியில் இராணுவ கடமைகள் குறித்து உரையினை மேற்கொண்டார். latest Nike Sneakers | 『アディダス』に分類された記事一覧