Header

Sri Lanka Army

Defender of the Nation

28th September 2019 18:27:45 Hours

இலங்கை இராணுவத்தினர் 70 ஆவது ஆண்டு நிறைவை நோக்கி

இலங்கையின் பாரிய சேவையை வழங்கி, தாய்நாட்டின் பாதுகாப்பிற்காக பிரதான கண்காணிப்புக் குழுவாகவும், துணிச்சலான மற்றும் தன்னலமற்ற தியாகங்களின் ஒப்பிடமுடியாத பதிவைக் கொண்டுள்ள இலங்கை இராணுவமானது 70 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு இன்று (28) ஆம் திகதி கண்டியில் உள்ள ஸ்ரீ தலதா மாளிகையில் கொடி ஆசீர்வாத நிகழ்வுகள் இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களது தலைமையில் இடம்பெற்றது.

இலங்கை இராணுவத்தின் 23 ஆவது இராணுவ தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்தி சில்வா அவர்கள் மல்லிகைப்பூ ஆசிர்வாத பூஜைகளிலும், ‘முருதன்’ மற்றும் ‘கிலன்பஸ்ச பூஜைகளிலும் கலந்து சிறப்பித்தார்.

அந்த பாரம்பரிய சடங்குகள் மற்றும் அன்றைய ‘தேவவா’ சடங்குகள் முடிந்தவுடன், இராணுவத்தின் சார்பாக இராணுவ தளபதி அவர்கள் தியவதன நிலமே அலுவலகத்தில் வைத்து ஸ்ரீ தலதா மாலிகை நிதிக்காக திரு பிரதீப் நிலங்கா தேலா, தியவதன நிலமே அவர்களிடம் நன்கொடையை அன்பளிப்பு செய்தார். அச்சமயத்தில் இராணுவ நினைவு தினத்தை முன்னிட்டு தியவதன நிலமே அவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தார்.

பின்னர் திப்பட்டுவாவே ஶ்ரீ சித்தார்த்த சுமங்கள மகாநாயக தேரர் மற்றும் வரகாகொட ஶ்ரீ ஞானரத்ன மஹாநாயக தேரர் அவர்களின் தலைமையில் 70 தேரர்களுக்கு ‘சாங்கிக தானம்’ வழங்கும் நிகழ்வு ஶ்ரீ தலதா மாளிகை மண்டபத்தில் இடம்பெற்றது.

துறவிகளின் அனுஷாசனங்கள் (சொற்பொழிவுகள்) அமைப்புக்கு ஆசீர்வாதம் அளித்தன, மேலும் நாட்டின் முன்னேற்றத்திற்காக இராணுவத்தால் இதுவரை செய்யப்பட்டுள்ள சேவைகள் குறித்தும் மூன்று தசாப்தங்களாக இரத்தக் வௌ்ளாரிலிருந்து இருந்து நாட்டைக் காப்பாற்றிய பெருமை இராணுவத்தை போய் சேரும். இலஙகை இராணுவமானது 1949 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இராணுவத்தில் சேவை செய்து நாட்டிற்காக உயர் தியாகம் செய்த இராணுவ வீர ர்களை நினைவு படுத்தி 'பென்வடவா' 'அட்டாபிரிகாரா' சமய சடங்குகள் இடம்பெற்றது.

அத்துடன் இன்று மாலை தலதா மாளிகை நுழைவாயிலில் வைத்து இராணுவ அனைத்து படையணியினரது பங்களிப்புடன் அணிவகுத்து இராணுவ கொடி ஆசிர்வாத நிகழ்வுகள் இடம்பெற்றது.

இலங்கை இராணுவத்திலுள்ள தொண்டர் படையணி, அனைத்து பாதுகாப்பு படைத் தலைமையகங்கள், பாதுகாப்பு முன்னரங்க தலைமையகம், படைப் பிரிவுகள், படைத் தலைமையகங்கள், படையணி தலைமையகங்கள், பயிற்சி பாடசாலை இராணுவ கொடிகள் இந்த ஆசிர்வாத பூஜைகளில் முன்வைக்கப்பட்டன.

இராணுவ தளபதியின் தலைமையில் இந்த ஆசிர்வாத பூஜைகள் இடம்பெற்றன.

கொடிகள் பின்னர் மேல் அறையில் 'தேவவா'வுக்குப் பொறுப்பான துறவிகளுக்கு வழங்கப்பட்டன, அங்கு ‘சேத் பிரித்’ கோஷமிடுவதும், மத அனுசரிப்புகளை நடத்துவதும் நாட்டின் பாதுகாப்பிற்கான இராணுவத்தின் நீண்ட பயணத்தில் ஆசீர்வாதங்கள் மேற்கொள்ளப்பட்டன. மல்வத்து விகாரையில் பதவியில் இருக்கும் வென் வல்கோவாகா ஸ்ரீ மேதங்கரா விமலாபுதி தேரர் மத அனுசரிப்புகளுக்கு தலைமை தாங்கினார். ஸ்ரீ தலதா மாலிகையில் ஒரு தனி ‘கிலன்பச பூஜை’, அதே மாலை (28) கண்டியின் பல்லேகேலில் உள்ள 11 பிரிவு தலைமையகத்தின் படையினரது ஒத்துழைப்புடன் இடம்பெற்றது.

இந்த மத நிகழ்வில் ஏராளமான இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் படையினர்கள் இணைந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

2. இராணுவ தளபதியவர்கள் அபிமன்சல – 1 மத்திய நிலையத்திற்கு விஜயம்

latest jordan Sneakers | Nike Air Max 270 - Deine Größe bis zu 70% günstiger