27th September 2019 08:07:45 Hours
இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களின் பணிப்புரைக்கமைய இராணுவ விளையாட்டுதுறை பணியகம் மற்றும் விளையாட்டு அபிவிருத்தி திணைக்களத்தின் ஒத்துழைப்புடன் முய்தாய் தற்பாதுகாப்பு பிரதான பயிற்றுவிப்பாளரான திரு தம்மிக முத்துகல அவர்களது தலைமையில் இராணுவ வீர ர்களின் பங்களிப்புடன் சாலியவெவையிலுள்ள மொடல் பாடசாலையில் மாணவர்களுக்கு இந்த முய்தாய் தற்பாதுகாப்பு பயிற்சிகள் வழங்கி வைக்கப்பட்ன.
இந்த பயிற்சிகள் இம் மாதம் (19) ஆம் திகதி 4 ஆவது சமிக்ஞை படையணியின் கட்டளை அதிகாரி லெப்டின ன்ட் கேர்ணல் பி.பி.சி பெரேரா, பாடசாலை அதிபர் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களது பங்களிப்புடன் இடம்பெற்றது.
இந்த தற்காப்புக் கலையை மாணவர் சமூகத்தினரிடையே பிரபலப்படுத்துவதற்கும், இந்த தற்காப்பு நுட்பத்தைக் கற்றுக்கொள்ள இளைஞர்களை ஊக்குவிப்பதற்கும், உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் எந்தவொரு சவால்களையும் வெற்றிகரமாக எதிர்கொள்ள அவர்களுக்கு உதவும் வகையில் இந்த பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
இப் பயிற்சியில் 400 க்கும் மேற்பட்ட மாணவர்களுடன் விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் பல அதிகாரிகளும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.url clone | Air Jordan Release Dates Calendar