Header

Sri Lanka Army

Defender of the Nation

27th September 2019 06:07:45 Hours

டெங்கு பரவுவதை கட்டுப்படுத்துமுகமாக மத்திய பாதுகாப்பு படையினரால் முன்னெடுக்கப்பட்ட சிரமதானப் பணிகள்

நாட்டில் ஏற்பட்ட அசாதாரன காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் டெங்கு நோய் பரவுவதை தடுக்குமுகமாக, மத்திய பாதுகாப்பு படை தளபதி மேஜர் ஜெனரல் லக்சிறி வடுகே அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், மத்திய பாதுகாப்பு படையானது தியத்தலாவ வைத்தியசாலை, தியத்தலாவ ஆயர்வேத வைத்தியசாலை, மற்றும் தியத்தலாவ இராணுவ வைத்தியசாலைகளின் வளாகங்களை துப்பரவு செய்வதற்கான பணிகளை கடந்த புதன் கிழமை(25) முன்னெடுத்தனர்.

மேலும், கடும் மழை காரணமாக ஏற்படும் டெங்கு பரவுவதை கட்டுப்படுத்துமுகமாக, இரண்டு இராணுவ அதிகாரிகள் உட்பட 62 படையினர் இவ் சிரமதான பணிகளில் பங்குகொண்டனர். இப்பணிகளின்போது வைத்திய ஊளியர்களும் படையினருடன் சேர்ந்து தங்களது பங்களிப்பினை வழங்கினர் என்பது குறிப்பிடத்தக்கவிடயமாகும். jordan Sneakers | Nike SB