26th September 2019 14:15:11 Hours
முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் ரூபாவதி கேதிஸ்வரன் அம்மையார் அவர்கள் முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு விடுத்த வேண்டுகோளுக்கமைய முல்லைத்தீவு மாவட்ட பெட்மின்டன் போட்டிகள் ஒட்டுசுட்டானில் அமைந்துள்ள 64 ஆவது படைப் பிரிவு தலைமையக உள்ளரங்க மைதானத்தில் செப்டம்பர் மாதம் 18 – 20 ஆம் திகதி வரை இடமபெற்றது.
இந்த போட்டிகளில் முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த 141 விளையாட்டு வீர வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.
இந்த போட்டிகள் 64 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் W.D.C.K கொஷ்தா அவர்களது தலைமையில் சிறந்த பாதுகாப்புடன் இடம்பெற்றது. இந்த போட்டிகளிற்கு சிறந்த ஒத்துழைப்பை வழங்கிய 64 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதிக்கு முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் ரூபாவதி கேதிஸ்வரன் அம்மையார் நன்றிகளை தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.Authentic Sneakers | Nike - Shoes & Sportswear Clothing