Header

Sri Lanka Army

Defender of the Nation

26th September 2019 14:29:07 Hours

‘கியோஷிரு பூடோ’ பயிற்சி பெற்ற படையினர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு

வன்னி பாதுகாப்பு தலைமையக்கினால் இரண்டாவது கட்டமாக நடாத்தப்பட்ட தற்காப்பு கலைகளில் ஒன்றான ‘கியோஷிரு பூடோ’ பயிற்சி படநெறியானது, கடந்த செவ்வாய் கிழமை(24) வன்னி பாதுகாப்பு படை தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் குணவர்தன அவர்களின் பங்குபற்றுதலோடு நிறைவடைந்தன.

இந்த தற்காப்பு கலை பயிற்சியானது வன்னி பாதுகாப்பு படை தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் குணவர்தன அவர்களின் முயற்சியினால் வன்னி படையினருக்கு அறிமுகப்படுத்தப்பட்டன.மேலும் இதற்கான ஆரம்ப நிகழ்வை அவர் கடந்த 2019 செப்டம்பர் 05ஆம் திகதி வன்னி பாதுகாப்பு தலைமையகத்தில் ஆரம்பித்து வைத்தார்.

மேலும் இந்த தற்காப்பு கலை மூலம் எந்த சூழ்நிலைகளிலும் எதிரிகளை எதிர்கொள்ளும் திறன் மற்றும் அவர்களின் பிரதான இலக்கை தோழ்வியடையச் செய்தல் போன்ற அனுபவங்களை பெற்றுக்கொள்ளலாம். மேலும் இது படையினர் தங்களது உடல் வலிமை மற்றும் மன வலிமையின் பெற்றுக்கொள்ளவும் உதவுகின்றது.

‘கியோஷிரு பூடோ’ தற்காப்பு கலையானது நவீன காலத்தில் நடைமுறையிலுள்ள 13 தற்காப்பு கலைகளில் வித்தியாசமான சண்டை நுட்பங்களை பயன்படுத்தி எதிரிகளை தோல்வியடைய செய்கின்ற பிரதானமான தற்காப்பு கலையாகும்.

மேலும், இந்த தற்காப்பு கலை பயிற்சியானது இலங்கையில் தற்காப்பு கலையில் தலை சிறந்து விளங்கும் தற்காப்பு கலை பயிற்றுவிப்பாளர்களில் ஒருவரான டென்ஷி திரு டி சொய்ஷா( கருப்பு பட்டி – டான்8) அவர்கள் பிரதான தற்காப்பு கலை பயிற்றுவிப்பாளராக அனுபவமிக்க குழு மற்றும் தரமான இராணுவ பயிற்றுவிப்பாளர்களுடன் சேர்ந்து நடாத்தப்பட்டது.

24 அதிகாரிகள் மற்றும் 1000 ஏனைய படை வீரர்கள் வன்னி பாதுகாப்பு படைத் தலைமையக்கிற்கு கிழ் இப் பயற்சியினை பெற்றனர்.

மேலும் இந்த தற்காப்பு கலை பயிற்சியின் நிறைவு நிகழ்விற்கு வன்னி பாதுகாப்பு படை தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் குணவர்தன அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டதோடு, பயிற்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ்களை வழங்கினார். மேலும் அனைத்து பயிற்சி பெற்றவர்களும் சான்றிதழ் வழங்கும் விழாவின்போது குறித்த தற்காப்பு கலையினை அரங்கேற்றிக் காட்டினர். அனைத்து பயிற்சி நடவடிக்கைளும் பதவி நிலை அதிகாரி(11) (பயிற்சி) மேஜர் எஸ்யூபி பிரிமத்தலதவ அவர்களினால், பிரிகேடியர் ஜெனரல் ஸ்டாப் (பா.ப.த-வ) எச்.பி. ரனசிங்க அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் கண்காணிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து குறித்த நிகழ்வானது இசைநிகழ்சியுடன் முடிவடைந்தன.

குறித்த இவ் இறுதி நிகழ்வு மற்றும் இசைநிகழ்சில் 12, 54, 56, மற்றும் 62ஆவது படைப் பிரிவின் படைத் தளபதிகள், படைத் தலைமையகங்களின் கட்டளைத் தளபதிகள், கட்டளை அதிகாரிகள் ,சிரேஷ்ட பதவி நிலை அதிகாரிகள், மற்றும் ஏனைய படைவீரர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர். Nike shoes | New Releases Nike