Header

Sri Lanka Army

Defender of the Nation

26th September 2019 16:55:59 Hours

சுகததாச உள்ளரங்கில் இடம்பெற்ற கரப்பந்து & வளைப்பந்தாட்ட சம்பியன்ஷிப் இறுதிப் போட்டிகள்

அதிகளவில் எதிர்பார்கப்பட்ட 2019ஆம் ஆண்டிற்கான இலங்கை இராணுவ தொண்டர் படையணியைச் சேர்ந்த படைத் தலைமையகங்களுகிடையிலான கரப்பந்து & வளைப்பந்தாட்ட இறுதி சம்பியன்ஷிப் போட்டிகள் புதன் கிழமை(25) சுகததாச உள்ளரங்கில் இடம்பெற்றன.

மேலும், இரண்டு இறுதிப் போட்டிகளுக்கும் பிரதம அதிதியாக கலந்து கொண்ட லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள், பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்த இலங்கை சிங்க படையணி மற்றும் இலங்கை இலேசாயுத படையணிகளக்கிடையிலான போட்டியினை கண்டு களித்தார். இலங்கை இராணுவ தொண்டர் படையணியைச் சேர்ந்த 20 ஆண்கள் குழுவானது வளைப்பந்தாட்ட இறுதி சம்பியன்ஷிப்-2019 போட்டியில் சுப்பர் லீக் மற்றும் ‘ஏ’ பிரிவு என இரண்டு பிரிவுகளினடிப்படையில் போட்டியிட்டன. ஆயினும் இலங்கை சிங்க படையணியானது இறுதியில் போட்டியின் சம்பியன்ஷிபாக தெரிவு செய்யப்பட்டது.

அதேவேலை, மகளிர் படைகளுக்கிடையிலான கரப்பந்து & வளைப்பந்தாட்ட இறுதி சம்பியன்ஷிப் போட்டிகளானது, ஐந்து குழுக்களை பிரதிநிதித்துவப்படுத்தி அதேநாள் இடம்பெற்றன. 4இலங்கை இரணுவ மகளிர் படையணி மற்றும் இலங்கை இராணுவ பொது சேவைப் படையணிகளுக்கிடையில் இடம்பெற்ற கரப்பந்தாட்ட சம்பியன்ஷிப் போட்டியில் 4இலங்கை இரணுவ மகளிர் படையணியானது சம்பியனாக தெரிவு செய்யப்பட்ட அதேவேலை, 4இலங்கை இரணுவ மகளிர் படையணி மற்றும் 5இலங்கை இரணுவ மகளிர் படையணிகளுக்கிடையில் இடம்பெற்ற வளைப்பந்தாட்ட இறுதிப் போட்டியில் 4இலங்கை இரணுவ மகளிர் படையணி வெற்றிபெற்றது.

மேலும், பிரதம அததியாக கலந்துகொண்ட இராணுவத் தளபதியவர்கள் இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் படைத் தளபதி அவர்களினால் வரவேற்கப்பட்டார். இராணுவத் தளபதி மற்றும் ஏனைய சிரேஷ்ட அதிகாரிகளின் பங்குபற்றுதலுடன் ஆரம்பிக்கப்பட்ட இப்போட்டியின் வெற்றி வீர வீராங்கனைகளுக்கான கிண்ணங்கள், பண பரிசில்கள், மற்றும் சான்றிதழ்கள் போன்றன இராணவத் தளபதி மற்றும் ஏனைய அதகாரிகளினால். வழங்கப்பட்டன.

அதனைத் தொடர்ந்து, இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் படைத் தளபதி அவர்களின் அழைப்பின்பிரகாரம் இராணுவ தளபதியவர்கள் உரைநிகழ்த்தினார். இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் பிரதி படைத் தளபதி அவர்களின் நன்றிவுரைக்கு முன்னதாக தளபதியவர்களுக்கு நினைவுச் சின்னம் வழங்கப்பட்டது. jordan release date | Nike