Header

Sri Lanka Army

Defender of the Nation

26th September 2019 15:00:06 Hours

பாகிஸ்தான் இராணுவ உயரதிகாரி இராணுவ தளபதியை சந்திப்பு

பாகிஸ்தான் நாட் டைச் சேர்ந்த உயதரிகாரியான மேஜர் ஜெனரல் ஹூசைன் மும்தாஸ் அவர்கள் இம்முறை இடம்பெற்ற “நீர்காகம் கூட்டுப்படைப் பயிற்சி” அப்பியாசத்தை பார்வையிடுவதற்காக இலங்கைக்கு விஜயத்தை மேற்கொண்டார். வருகை தந்த இவர் இம் மாதம் (25) ஆம் திகதி இலங்கை இராணுவ தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களை இராணுவ தலைமையத்தில் சந்தித்தார்.

இச்சந்திப்பின் போது இம்முறை சாத்தியமான முறையில் இடம்பெற்ற கூட்டுப்படை பயிற்சி தொடர்பாகவும் இருநாடுகளுக்கு இடையிலான உறவு முறையை மேம்படுத்தும் விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டன. அத்துடன் 1960 ஆம் ஆண்டிலிருந்து இலங்கை பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையிலான பயிற்சி திட்டங்கள் பரிமாறிக் கொண்ட விடயங்கள் தொடர்பாக நினைவு கூர்ந்தப்பட்டது.

பின்னர் இவர்களது இச்சந்திப்பை நினைவு படுத்தும் முகமாக இருவர்களுக்கும் இடையில் நினைவுச் சின்னங்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன. இறுதியில் பிரமுகர்களது வருகையை முன்னிட்டு கையொப்பமிடும் புத்தககத்தில் பாகிஸ்தான் உயரதிகாரி கையொப்பமிட்டார்.

இந்த பாகிஸ்தான் உயரதிகாரியுடன் பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு இணைப்பதிகாரியும் இணைந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். affiliate link trace | 【国内5月2日発売予定】ナイキ ウィメンズ エアマックス ココ サンダル 全4色 - スニーカーウォーズ