25th September 2019 13:55:30 Hours
கடந்த ஏப்ரல் மாதம் உதிர்த்த ஞாயிறன்று தேசிய தௌவீத் ஜமாத் பயங்கரவாத அமைப்பினால் மேற்கொண்ட தாக்குதலின் பின்பு முப்படையினர் மற்றும் பொலிஸாரால் மேற்கொண்ட சிறந்த சேவையை பாராட்டும் முகமாக சங்கிரிலா ஹோட்டல் முகாமைத்துவத்தினால் முப்படை மற்றும் பொலிஸ் திணைக்களத்தைச் சேர்ந்த அங்கத்தவர்கள் 400 பேருக்கு இரவு விருந்தோம்பல் சங்கிரிலா ஹோட்டலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
சங்கிரிலா ஹோட்டலின் பொது முகாமையாளர் மற்றும் ஹோல்ஃபேஸ் ஹோட்டல் இந்த அழைப்பை பாதுகாப்புப் படையினருக்கு வழங்கியிருந்தது. இந்த விருந்தோம்பலின் போது பொது பதவிநிலை அதிகாரி லெப்டினன்ட் கேர்ணல் நலின் ஹேரத் அவர்கள் நன்றியுரையை ஆற்றினார்.
இந்த விருந்தோம்பலில் 14 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் சூல அபேரத்ன மற்றும் முப்படை மற்றும் பொலிஸ் அதிகாரிகள் இணைந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். Asics shoes | NIKE RUNNING SALE