Header

Sri Lanka Army

Defender of the Nation

25th September 2019 07:15:42 Hours

ஓய்வு பெற்றுச் செல்லும் மேஜர் ஜெனரல் குணவர்தன அவருக்கு மரியாதை நிகழ்வு

விஜயபாகு காலாட் படையணியின் படைத் தளபதியும், இராணுவ அதிகாரி துறைசார் அபிவிருத்தி நிலையத்தின் முன்னாள் கட்டளைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் சந்தன குணவர்தன அவர்கள் இராணுவ சேவையில் 34 வருடங்கள் சேவையாற்றி ஓய்வு பெற்றுச் செல்லும் இச்சமயத்தில் இவருக்கு இவரது விஜயபாகு காலாட் படைத் தலைமையகத்தில் இம் மாதம் (22) ஆம் திகதி கௌரவ மரியாதை வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.

முதல் கட்டமாக இவருக்கு போயகனையிலுள்ள தலைமையகத்தில் இராணுவ சம்பிரதாய முறைப்படி அணிவகுப்பு மரியாதைகள் வழங்கி கௌரவிக்கப்பட்டார். அதனை தொடர்ந்து படைத் தளபதி அவர்கள் தலைமையக வளாகத்தினுள் அமைந்துள்ள இராணுவ நினைவு தூபிக்கு சென்று நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த படை வீரர்களை நினைவு படுத்தி கௌரவ அஞ்சலியையும் செலுத்தினார்.

பின்பு படைத் தளபதி அவர்கள் படையினர் மத்தியில் உரையாற்றினார். இந்த உரையின் போது இவர் சேவையாற்றிய காலத்தினுள் ஒத்தழைப்பை வழங்கிய படையினர்களுக்கு தனது மனப்பூர்வமான நன்றிகளை தெரிவித்தார். மேலும் இவரது சேவையை பாராட்டி இவருக்கு படையணியினால் நினைவுச் சின்னமும் பரிசாக வழங்கி வைக்கப்பட்டன.

பின்பு இவரது படைத் தளபதி பதவியை புதிய படைத் தளபதியான மேஜர் ஜெனரல் ரோஹன கெடகும்புர அவர்களுக்கு உத்தியோக பூர்வமாக கையொப்பமிட்டு பாரமளித்தார். Adidas shoes | 【海外近日発売予定】 サウスパーク × アディダス オリジナルス キャンパス 80S "タオリー" (GZ9177) - スニーカーウォーズ