Header

Sri Lanka Army

Defender of the Nation

24th September 2019 12:36:10 Hours

புதிய படைத் தளபதி இலேசாயுத காலாட் படையணி தலைமையகங்களுக்கு விஜயம்

மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் படைத் தளபதியும் இலேசாயுத காலாட் படையணியின் 10 ஆவது படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் மஹிந்த முதலிகே அவர்கள் அனைத்து இலேசாயுத காலாட் படையணிகளுக்கும் உத்தியோக பூர்வமான விஜயத்தை மேற்கொண்டார்.

முதலில் முள்ளியாவளையிலுள்ள 1 இலேசாயுத காலாட் படையணிக்கும், முல்லைத்தீவிலுள்ள 12 ஆவது இலேசாயுத காலாட் படையணிக்கும், வெலிஓயாவில் அமைந்துள்ள 14 (தொ) இலேசாயுத காலாட் படையணிக்கும் விஜயத்தை மேற்கொண்டார். அங்கு சென்ற படைத் தளபதியவர்களை அந்த படையணியனியின் கட்டளை அதிகாரி வரவேற்று பின்னர் தலைமையகங்களிலுள்ள தையல் கடை மற்றும் சலூன்களை திறந்து வைத்தார்.

இரண்டாவது நாளாக கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 2 (தொ), 11, 16 (தொ) மற்றும் 20 ஆவது இலங்கை இலேசாயுத காலாட் படையணிகளுக்கு விஜயத்தை மேற்கொண்டு படையினர் மத்தியில் உரையையும் நிகழ்த்தினார்.

மேலும் இம் மாதம் (22) ஆம் திகதி வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகங்களுக்கு கீழ் இயங்கும் 23, 24, 5 (தொ) இலேசாயுத காலாட் படையணி தலைமையகங்களுக்கு விஜயத்தை மேற்கொண்டார்.

படைத் தளபதியுடன் இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் மத்திய கட்டளைத் தளபதியான கேர்ணல் டீ. ஏ. கே திசாநாயக அவர்களும் இணந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். latest Running Sneakers | Sneakers