Header

Sri Lanka Army

Defender of the Nation

23rd September 2019 14:37:56 Hours

கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 2019 ஆண்டிற்கான விளையாட்டு போட்டிகள்

கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் வருடாந்தம் நடாத்தப்படும் “ஆமி ஈஸ்டன் கேம்ஷ்” 2019 ஆம் ஆண்டிற்கான விளையாட்டு போட்டிகளின் நிறைவு விழாவானது இம் மாதம் 21 ஆம் திகதி கிழக்கு பாதுகாப்பு தலைமையக விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.

இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக கிழக்கு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர அவர்கள் வருகை தந்து சிறப்பித்தார்.

போட்டிகளானது கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகங்களுக்கு கீழ் இயங்கும் 22, 23, 24 ஆவது படைப் பிரிவுகளுக்கு இடையில் இடம்பெற்றது.

விளையாட்டு போட்டிகளில் மரதன், ரிலே ஓட்டம், நீண்ட ஓட்டம், உயரம் மற்றும் நீளம் பாய்தல், குண்டெறிதல், டிஸ் எரிதல் போன்ற போட்டிகள் முன் வைக்கப்பட்டிருந்தன். இதில் வீர, வீராங்கனைகள் பின்பற்றிக் கொண்டனர்.

இந்த நிகழ்வில் சிறப்பம்ஷமாக தற்பாதுகாப்பு பயிற்சியாளர்களின் கண்காட்சிகளும் முன் வைக்கப்பட்டிருந்தன. அத்துடன் இந்த விளையாட்டு போட்டிகளில் 22 ஆவது படைப் பிரிவு 243 புள்ளிகளை பெற்று சம்பியனாக தேர்ந்தெடுக்கப்பட்டது. 23 ஆவது படைப் பிரிவு 161 புள்ளிகளை பெற்று இரண்டாவது இடத்தை பெற்றுக் கொண்டது. என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

சிறந்த விளையாட்டு வீரனாக 15 ஆவது இலங்கை காலாட் படையணியைச் சேர்ந்த கோப்ரல் எஸ் டி ஜே டி சில்வா அவர்களும், சிறந்த விளையாட்டு வீராங்கனையாக 2 ஆவது சமிக்ஞை படையணியைச் சேர்ந்த போர் வீராங்கனை ஈ ஜி எஸ் எச் சேனாரத்ன அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இவர்களுக்கு கிழக்கு பாதுகாப்பு படைத் தளபதி அவர்களினால் பரிசுகள் வழங்கு கௌரவிக்கப்பட்டனர்.

இந்த நிகழ்வில் படைத் தளபதிகள், கட்டளை தளபதிகள், கட்டளை அதிகாரிகள் மற்றும் இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் இணைந்திருந்தனர். latest jordans | Nike