Header

Sri Lanka Army

Defender of the Nation

22nd September 2019 18:35:20 Hours

மின்னேரிய கூட்டுப் படைத் தலைமையகத்திற்கு பாகிஸ்தான் இராணுவ உயரதிகாரி வருகை .

“நீர் காகம் 2019 கூட்டுப்படைப் நடவடிக்கை பயிற்சியை பார்வையிடுவதற்கு பாகிஸ்தான் உயரதிகாரியான மேஜர் ஜெனரல் ஹூசைன் மும்தாஸ் அவர்கள் மின்னேரியவில் அமைந்துள்ள கூட்டுப் படைப் பயிற்சி தலைமையகத்திற்கு இம் மாதம் (22) ஆம் திகதி விஜயத்தை மேற்கொண்டார்.

இவரை இலங்கை இராணுவ கூட்டுப்படை பயிற்சி பணிப்பாளர் மேஜர் ஜெனரல் லக்சிறி வடுகே அவர்கள் வரவேற்றார். பின்னர் இவரினால் இம்முறை இடம்பெறும் கூட்டுப்பயிற்சி தொடர்பான விபரங்கள் பாகிஸ்தான் உயரதிகாரிக்கு முன்வைக்கப்பட்டன.

இந்த பயிற்சியானது 10 ஆவது தடவையாக இடம்பெறுவதுடன் 2400 இலங்கை இராணுவத்தினரும், 400 கடற்படையினரும், 200 விமானப் படையினரும் 10 நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டு அதிகாரிகளும் இந்த கூட்டுப் பயிற்சியில் பங்கேற்றிக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

மலேசியா, மாலைதீவு, நேபாளம், ரஷியா, பங்களாதேசம், சீனா, இந்தியா, பாகிஸ்தான், இந்தோனிஷியா, நைஜீரியா மற்றும் சாம்பியா நாட்டைச் சேர்ந்த இராணுவத்தினர் இந்த பயிற்சியில் இணைந்து கொண்டனர். Sports brands | adidas