Header

Sri Lanka Army

Defender of the Nation

22nd September 2019 10:42:29 Hours

இராணுவ தளபதியினால் மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைப்பு

யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு விஜயத்தை மேற்கொண்ட இராணுவ தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களினால் வாழ்வாதாரத்தில் பின் தங்கிய குடும்பத்தைச் சேர்ந்த யாழ் மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் இம் மாதம் (21) ஆம் திகதி வழங்கி வைக்கப்பட்டன.

வாழ்வாதாரத்தில் பின் தங்கிய குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்கள் பாடசாலைகளுக்கு தொலைவிலிருந்து வருகை தருவதன் நிமித்தம் இவர்களது கல்வி துறையை மேம்படுத்தும் நோக்கத்துடன் இராணுவத்தினரால் இந்த துவிச்சக்கர வண்டிகள் இந்த மாணவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டன.

இந்த பகிர்ந்தளிப்பு நிகழ்விற்கு பிரதம அதிதியா வருகை தந்த இராணுவ தளபதியவர்கள் நல்லிணக்கத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் இந்த நிகழ்வில் உரையை நிகழ்த்தினார். இதன் போது சமூக நலன்புரி திட்டங்கள் நிமித்தம் உதவிகளை வழங்குவதற்கு இராணுவம் தயாராக உள்ளதாக இராணுவ தளபதியவர்கள் தெரிவித்தார்.

கடந்த ஒருவருட காலத்தினுள் யாழ் மாவட்டைச் சேர்ந்த பின் தங்கிய குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு இராணுவத்தினரால் 400 சைக்கிள்கள் வழங்கி வைக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

மேலும் இந்த நிகழ்வில் பின்தங்கிய குடும்பத்தைச் சேர்ந்த நபர்களுக்கு மரக்கன்றுகளும் இராணுவத்தினரால் வழங்கி வைக்கப்பட்டன. இந்த நிகழ்வில் இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் அதிகாரிகள் இணைந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். Best jordan Sneakers | Converse Chuck Taylor All Star Translucent - Women Shoes - 165609C